சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்! - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

0

Also Read: கரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை் சேர்ந்த, கூலித்தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், கடந்த 2014 - ம் ஆண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்திருக்கிறார். அப்போது, அவரது உடலில் மாற்றங்கள் தென்படுவதைக் கண்ட, அந்தச் சிறுமியின் பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு, அந்த சிறுமியியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக, இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, ``பரமத்தி வேலூர் அருகில் உள்ள குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகனான ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது: 29) என்பவர், தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, அழுதிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று விசாரித்திருக்கின்றனர். அதற்கு, மணிகண்டன் குடும்பத்தினர், சிறுமியின் குடும்பத்தினரைத் தவறாகப் பேசி திட்டி, மிரட்டி அனுப்பியிருக்கின்றனர்.

பரமத்தி வேலூர்

Also Read: `சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!’- கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்ஸோ நீதிமன்றம்

இதனால், சிறுமியின் பெற்றோர் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார், மணிகண்டன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். மேலும், மணிகண்டன், அவருடைய தந்தை பொன்னுசாமி மற்றும் தாய் லட்சுமி ஆகியோர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மணிகண்டனின் பெற்றோரை, இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளி மணிகண்டனை கோவைக்கு அழைத்துச் சென்று, சிறையில் அடைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mC1jFL
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*