``கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருக்கின்றனவா!"- நாமக்கலில் கைதான போலி அதிகாரி

0

Also Read: கரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர், அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். மதியம் 1 மணிக்கு பெருமாளின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், தான் உணவுப் பாதுகாப்பு அதிகாரி என்றும், கடையில் ஆய்வு செய்ய வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனை முதலில் உண்மை என பெருமாள் நம்பி, கடையை சோதனை செய்ய அனுமதித்திருக்கிறார். அப்போது அந்த வாலிபர், ``கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? உங்கள் கடையில் ஏராளமான தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை பதுக்கி வைத்து, ரகசியமான விற்பனை செய்வதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது" எனக் கேட்டிருக்கிறார். அதோடு, அங்கிருந்த பொருட்களைக் கலைத்துள்ளார். பின்னர், அங்கிருந்த பீரோவைத் திறந்து திருட முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெருமாள், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். மேலும், கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளுடன் நின்ற நபரை சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் பிடித்தனர்.

நாமக்கல்

Also Read: தூத்துக்குடி: `உங்க கடையில எதுவும் சரியில்லை!’ - சிக்கிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி

இதுகுறித்து, தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல்நிலைய போலீஸார், அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் இரண்டு பேரையும் அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக நடித்தவர், பள்ளிபாளையம் சின்ன வீதி பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மணிகண்டன் (வயது: 27) என்பது தெரியவந்தது. இவர்மீது, ஏற்கெனவே நாமக்கல் மற்றும் பள்ளிப்பாளையம் காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் வெள்ளித்திருப்பூர், கவுந்தப்பாடி மற்றும் தொட்டியம் பகுதிகளில் அரசு அதிகாரி எனக்கூறி திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை போலீஸார் கைது செய்தனர். பிடிபட்ட மற்றொரு வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3atdHSA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*