இந்து அறநிலையத் துறை கல்லூரிகளில் தமிழர் மெய்யியல், தமிழ் இலக்கியப் பாடப்பிரிவுகள்... அரசு ஏற்குமா?

0
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கல்லூரிகளில், வழக்கமான படிப்புகள் மட்டுமல்லாமல், தமிழர் மெய்யியல், தமிழ் இலக்கியம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும் என தெய்வத்தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
சங்க இலக்கியம்

இதுகுறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தெய்வத்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், "இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் கூடுதலாக உள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை அருள்மிகு கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரி தற்போது விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பி.காம்.(B.Com.), பி.சி.ஏ.(B.C.A.), பி.பி.ஏ.(B.B.A.), பி.எஸ்.சி.(B.Sc.) கணிப்பொறிப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுள்ளன.

அதில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் படிப்புகளுக்கான வகுப்புகள் இல்லை. ஒருவேளை இவ்விரு தலைப்புகளில் பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் சேர மாட்டார்கள் என்று அரசு கருதி இப்படிப்புகள் சேர்க்கப்படவில்லையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. அவ்வாறு மாணவர்களிடையே இவ்விரு பட்டப் பிரிவுகளில் சேர ஆர்வம் இருக்காது என ஒருவேளை தமிழக அரசுக்குத் தோன்றியிருந்தால், இப்படிப்புகள் குறித்து ஆர்வம் ஏற்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. கூடுதல் உதவித் தொகை, பணி அமர்த்தலில் இப்படிப்புப் படித்தோர்க்குச் சிறப்பு முன்னுரிமைகள் போன்ற ஊக்கங்களை அளித்து, அவற்றை அறிவித்துதான் விண்ணப்பங்கள் கோர வேண்டும்.

பெ.மணியரசன்

இப்பொழுது விண்ணப்பங்கள் கோரப்படுள்ள பட்டப்படிப்புகளில் தமிழ்ப் பயிற்று மொழி உண்டா என்ற விவரமும் விளம்பரத்தில் இல்லை. தமிழ்ப் பயிற்று மொழிப் பாடப்படிப்புகள் கட்டாயத் தேவை. தமிழ்ப் பயிற்று மொழிவழி படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் தமிழ்நாடு அரசு 20 விழுக்காடு ஒதுக்கியுள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்து அறநிலையத் துறையின் சார்பில் இயங்குகின்ற மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்களும், தமிழ்ப் பயிற்று மொழி ஏற்பாடும் வேண்டும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uZmXHU
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*