வேலூர்: மாட்டைத் தேடிச் சென்ற தம்பதி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம் - மின்வேலி காரணமா?

0

வேலூர் மாவட்டம், திருவலம் அருகிலிருக்கும் உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(34). நேற்று முன் தினம், ஜெயப்பிரகாஷும், அவரின் மனைவி அஷ்வினியும், மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடு வீடு திரும்பாததால், இரவு நேரத்தில் மாட்டை தேடிச்சென்றிருக்கின்றனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. காலை விடிந்தப் பின்னரும் வராததால் உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தின் அருகில் தம்பதியர் இருவரும் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் அருகில் பசுமாடும் இறந்துகிடந்ததால் துக்கம் தாளாமல் உறவினர்கள் கதறி அழுதனர்.

உடல்களைப் பார்வையிட்ட போலீஸார்

தகவலறிந்ததும், திருவலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜெயப்பிரகாஷ், அஸ்வினி, பசுமாட்டின் உடல்களில் மின்வேலியில் சிக்கியதற்கான காயங்கள் இருந்தன. இது குறித்து காவல் துறை கூறுவதாவது, ‘‘காட்டுப்பன்றி போன்ற விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க நிலத்தின் உரிமையாளர் சட்ட விரோதமாக மின்வேலியை அமைத்திருக்கலாம். மேய்ச்சலுக்கு வந்த பசு, மின்வேலியில் சிக்கி இறந்த நிலையில், அதனை தேடிவந்த தம்பதியரும் இருட்டில் மின்வேலியில் சிக்கியிருப்பார்கள். இதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம். விடிந்தப் பின்னர், சடலங்களைப் பார்த்து மின்வேலியை உரிமையாளர் அகற்றி எடுத்துச்சென்றிருக்கலாம்’’ என்று சந்தேகிக்கிறது காவல்துறை. இதே கோணத்தில், நிலத்தின் உரிமையாளர் உட்பட சிலரைப் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oDtGpQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*