நவராத்திரி பாரம்பர்ய விழாவுக்காக திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்ற குமரி மாவட்ட சுவாமிகள்!

0

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா 6-ம் தேதி தொடங்கி ஒன்பது நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டுச் செல்வது வழக்கம். விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படும். இந்த மரபு திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி முதலே தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக்கு வாகனத்தில் வேளிமலை முருகன் கோயிலைச் சென்றடைந்து, அங்கிருந்து வேளிமலை முருகன் விக்கிரகமும் சேர்ந்து பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆலயத்திற்கு சென்றடைந்தது. பின்னர் பத்மநாபபுரம் அரண்மனையின் பாரம்பரிய உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பத்மநாபபுரம் அரண்மனையின் மேல் மாடியில் உப்பரிகை மாளிகை மேல்மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், ஆகியோர் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாரம்பர்ய உடைவாள் மாற்றும் நிகழ்வு

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமயில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நடைபெற்றது. வழக்கமாகத் தமிழக போலீஸாருடன் கேரள மாநில போலீஸாரும் பத்மநாபபுரம் வந்து திருவனந்தபுரம் செல்லும் சாமி விக்கிரகங்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். கடந்த ஆண்டுவரை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று கேரளத்தில் அதிகமாக இருப்பதால் கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய மூன்று சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு பல்லக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றன.

இதற்கிடையே கேரள போலீஸாரை தமிழக அரசு வரவேண்டாம் என கூறியதாகத் தகவல் வெளியானது. இதுபற்றி கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறும்போது, " கேரளா அரசு வெள்ளிக் குதிரை ஊர்வலத்தை நடத்தவும், பத்மநாபபுரம் அரண்மனையில் சாமி சிலைகளுக்கு பாரம்பர்ய முறையில் கேரளா போலீசாரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தவும் தமிழக அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் கொரோனா விவகாரத்தால் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது" என்றார்.

பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி சுவாமி ஊர்வலம்

இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறும்போது, "கேரளாவில் இருந்து அதிக அளவில் ஆட்கள் வந்தால் கொரோனா நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் தமிழக அரசு வெள்ளி குதிரை ஊர்வலம் மற்றும் போலீஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்துள்ளது. எந்த விதத்திலும் நம் பாரம்பர்ய நிகழ்வை விட்டு கொடுக்க மாட்டோம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3A6l2lB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*