கரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்

0

மக்கள் பார்வைக்கு பன்றி பண்ணை நடத்துவதுபோல் காட்டிவிட்டு, உள்ளே கள்ளச்சாராயம் காய்ச்சியதை கண்டறிந்த போலீஸார், 30 லிட்டர் சாராயத்தை கைப்பற்றியிருப்பது கரூரில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

கரூர்

கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுத்து. இவரது மகன், கோபாலகிருஷ்ணன் (வயது: 30). இவர், கடந்த 10 ஆண்டுகளாக தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மலையப்பன் மகன் கார்த்தி( 45) என்பவருக்கு சொந்தமான சாலைத்தோட்டத்தில் உள்ள இடத்தில் வெள்ளைப் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். வெளியில் பார்ப்பதற்கு வெள்ளைப் பன்றி பண்ணை நடத்தி வருவதுபோல் காட்டிவிட்டு, உள்ளே திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதை அப்பகுதி மக்கள் கண்டுப்பிடித்தனர்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கும், அதேபோல் கரூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கும் ரகசிய தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நெப்போலியன் மற்றும் மது விலக்கு பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெள்ளைப் பன்றி பண்ணை உள்ள பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பண்ணை பகுதியிலுள்ள கோபாலகிருஷ்ணனின் அறையில், சுமார் 30 லிட்டர் கள்ளச்சாராயம் கேனில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் வருவதை பார்த்த வெள்ளை பன்றி பண்ணை நடத்தி வரும் கோபாலகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார். அப்போது, வெள்ளைப் பன்றி பண்ணையில் வேலை செய்துவரும், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஓலப்பாளையம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி (வயது 23) என்பவர் அங்கு இருந்துள்ளார். அவரைப் பிடித்த போலீஸார், எவ்வளவு நாட்களாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது, தயார் செய்யப்பட்ட கள்ளச்சாராயம் எங்கெங்கு வினியோகம் செய்யப்படுகிறது, யார் யார் இங்கு வந்து கள்ளச்சாராயத்தை வாங்கிச் செல்கிறார்ககள் அல்லது நீங்களே கள்ளச்சாராயத்தை நேரடியாக சென்று விற்பனை செய்து வருகின்றீர்களா' என்றெல்லாம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய கோபாலகிருஷ்ணனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ArcUfy
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*