ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். கூட்டங்களில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘‘எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுக-வை அசைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிப் பெறும். சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன. காலையில் பேப்பரை திறந்தால் அனைத்து பக்கங்களிலும் கொலை, கொள்ளை செய்திகள்தான் இருக்கின்றன. பூரா ரௌடிகளும் தமிழகத்துக்கு வந்துவிட்டார்கள். ஈசியாக வழிப்பறி செய்யலாம். பட்டப்பகலில் கொலைச் செய்யலாம் என்ற நிலை இருக்கிறது. நாம் அறிக்கைவிட்டப் பின் மூன்றாயிரம் ரௌடிகளைப் பிடித்துவிட்டோம். நான்காயிரம் ரௌடிகளைப் பிடித்தோம் என்று சாதனையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
துரைமுருகன் எம்.ஜி.ஆரைப் பற்றி நாகூசாமல் அவதூறாக பேசியுள்ளார். அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ‘எம்.ஜி.ஆர் என் இதயக்கனி’ என அண்ணா சொன்னார். அவர் நம்பிக்கை துரோகியா? ஏன், துரைமுருகனைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினார். திரைப்படங்கள் மூலம் திராவிட கொள்கைகளை பரப்பி தி.மு.க ஆட்சிக்குவர காரணமாக இருந்த எம்.ஜி.ஆரா நம்பிக்கை துரோகி? மேடையில் எல்லோரும் சிரிக்கவேண்டும் என்பதற்காக நாகூசாமல் பேசக்கூடாது. மீண்டும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக துரைமுருகனுக்குக் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்’’ என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FbgL3X
via
