புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(44). இவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மனைவி கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாரிமுத்துவைக் கைது செய்தனர். இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, "மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாரிமுத்துவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும்” விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மாரித்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 9 மாத காலத்துக்குள்ளே குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3m4NqQS
via
