``மதுவிலக்கு கொண்டுவருவோம் என்றார்கள்... டாஸ்மாக் நேரத்தை கூட்டிவிட்டார்கள்!" - ஹெச்.ராஜா தாக்கு

0

பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா, வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுபேசிய அவர், ``வேலூர்ல இருந்து மெட்ராஸுக்கு குடிநீர் கொண்டுப்போகக் கூடாதுனு சொன்னவரு... இங்க இருக்கிற தண்ணீரை எடுத்து பாட்டிலில் அடைச்சு, ‘அருவி’ என்கிற பெயர்ல விற்கிறாரு. ‘தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்க மாட்டிக்குறான் மகாப்பாவி’னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, சென்னைக்குத் தண்ணீர் தரமாட்டேன்னு சொன்ன துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார்.

ஹெச்.ராஜா

அதேபோல, கட்டப்பஞ்சாயத்து செய்தால் அறநிலையத்துறை அமைச்சர். கள்ளச்சாராயம் காய்ச்சினால் கைத்தறித் துறை அமைச்சர். இதெல்லாம்தான் தி.மு.க அமைச்சர்களின் தகுதி. ஸ்டாலின் அரசாங்கத்துல மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும். எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி பேசுகிறார் கைத்தறி அமைச்சர் காந்தி. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் காந்தினு பெயர் வைத்துக்கொண்டால் எப்படியிருக்கும்?

Also Read: ``அந்நிய சக்திகளின் அச்சுறுத்தலால்தான் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றோம்!'' - சொல்கிறார் ஹெச்.ராஜா

கே.என்.நேரு ஒரு தெய்வ பக்தர். அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ‘கோளாறு ஆனவன் எல்லாம் மந்திரியாக ஆகிவிட்டான்’ என்று நேருவே சொல்லியிருக்கிறார். நேரு சொன்னதை காந்தி நிரூபிக்கிறார். தி.மு.க அரசாங்கம் ஏழு மாதங்களிலேயே அனைத்துத் துறைகளிலும் தோற்றுப்போய் விட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. ‘மதுவிலக்கு கொண்டுவருவோம்’ என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. தமிழ் குடிமகன்களை அதிகரிக்க இரவு 10 மணி வரை டாஸ்மாக் நேரத்தை கூட்டியிருக்கிறார்கள்.

கைத்தறித் துறை அமைச்சர் காந்தி

பஞ்சப்படி கொடுக்க முடியாத பஞ்ச பரதேசி அரசாங்கம் நடந்துகொண்டிருக்கிறது. முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் அவ்வையார் நகரிலிருக்கும் 60, 61-வது வார்டுகளில் மேம்பாலம், பார்க் கட்டுவதற்காக 120 வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களும், குழந்தைகளும் கண்ணீரும் கம்பலையுமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மோசமான நடவடிக்கையைத் திருத்திக் கொள்ளவில்லையென்றால், இந்த அரசாங்கம் சீக்கிரம் போய்விடும். அப்படி போய்விட்டாலும் நல்லதுதான் என்று வைத்துக்கொள்ளுங்கள்’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3e1gd4u
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*