``உரத் தட்டுப்பாட்டுக்கு எப்போதுதான் நடவடிக்கை எடுப்பீங்க?" - உதவி எண்ணில் கொந்தளித்த விவசாயி

0

உரத்தட்டுப்பாடு அதிக அளவில் நிலவி வருவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உரத் தட்டுப்பாடு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை விவசாயிகள் தெரியப்படுத்த அரசு தரப்பில் தனி செல் நம்பர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையை சேர்ந்த விவசாயி ஒருவர், ``பயிரை காக்கவேண்டும் என்றால் உரம் அவசியம். எங்களுக்கு எப்போதும் உரம் கிடைக்கும்" என கேட்டதற்கு சில தினங்களில் உரப்பிரச்னை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய பணியில் விவசாயிகள்

Also Read: `தனியார் கடைகளால்தான் இந்த நிலை!' - உரத் தட்டுப்பாட்டால் கொந்தளிக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி வீரசேனன் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள செல் நம்பருக்கு போன் செய்து உரத்தட்டுப்பாடு பிரச்னை எப்போதும் தீரும் என கேட்டதுக்கு பெண் அலுவலர் ஒருவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதுகுறித்து பேசிய வீரசேனன், ``நான் கல்லலணை கால்வாயின் கடைமடைப் பகுதி விவசாயி. நாங்கள் நேரடி விதைப்பின் மூலம் நெல் சாகுபடி செய்திருக்கிறோம். எங்களுக்கு தேவையான அடி உரம் கூட்டுறவு சங்கங்களிலும், வெளிமார்க்கெட்டிலும் கிடைக்கவில்லை.

உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதையும் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவித்தனர். அப்போதே பெரும்பாலான பயனாளிகளுக்கு உரம் கிடைக்கவில்லை. மாவட்ட அளவில் நடைபெற்ற கூட்டங்களில் விவசாயிகள் எச்சரிக்கை செய்யும் விதமாக தேவையான உரங்களை முன் கூட்டியே திட்டமிட்டு கையிருப்பு வைத்து கொள்ள வலியுறுத்தினார்கள்.

வீரசேனன்

தற்போது நடவு செய்துள்ள பயிர்களுக்கு எங்களுக்கு உரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் பெய்த மழையில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அதனை துளிர்க்க வைக்க வேண்டும் என்றால் உரம் அவசியம் தேவை. பயிரும் குழந்தை மாதிரிதான்; குழந்தைக்கு என்னென்ன தேவையோ அதை அந்தந்த காலங்களில் கொடுக்க வேண்டும். பயிரும் அது போலதான்; தேவையான நேரத்தில் அதற்கு தேவைப்படுவதை கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு விவசாயியும் நெல் பயிரை குழந்தை மாதிரி கவனிக்கின்றனர். உரம் இல்லாமல் பயிர்கள் வீணாவதை காண முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை விற்பதையும் தடுக்கவில்லை. ``எங்களுக்கு எப்ப தான் உரம் தரப் போறீங்க" என கேட்டவருக்கு எதிர்முனையில் பேசிய பெண் அலுவலர் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

விவசாயம்

Also Read: `கட்சி பூசல்களால் ஏற்பட்ட உரத் தட்டுப்பாடு!' - கூட்டுறவு சங்கங்களில் தவிக்கும் விவசாயிகள்

சில நிமிடங்களுக்கு பிறகு பேசிய ஆண் அலுவலர் ஒருவர், `ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு 1200 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் கேட்டுள்ளனர். தற்போது உரங்கள் இறங்கி கொண்டிருப்பதால் சில நாள்களில் உரம் வந்து சேர்ந்துடும். அவற்றில் 75 சதவீதம் கூட்டுறவு சங்கங்களுக்கும், 25 சதவீதம் தனியாருக்கும் கொடுக்கப்பட உள்ளது. ஐபிஎல் நிறுவன யூரியா இரண்டு நாளில் வந்துவிடும். காரைக்கால் துறைமுகத்தில் இரண்டு தினங்களாக ஸ்டிரைக் நடைபெற்றதால் அங்கு வந்த யூரியா ஏற்றப்படவில்லை.

தற்போது, பிரச்னை தீர்த்து 2,600 மெட்ரிக் டன் யூரியா ஏற்றப்பட்டு சில தினங்களில் ஒருங்கிணைந்த தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதே போல் மற்றுமொரு 1,400 டன் யூரியாவும் வர இருக்கிறது.சில தினங்களில் உரத் தட்டுப்பாடு பிரச்னை தீர்க்கப்படும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என பதிலளித்தார். தீர்வை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3E4QJxy
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*