கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் பி.காம் படித்துவருகிறார். அந்த மாணவி ஒரு வழிபாட்டு தலத்தில் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கலெக்சன் செய்யும் சேவையை செய்து வந்திருக்கிறார். சிறு சேமிப்பு பணத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கடன் பெறுவதும், சில நாள்களில் திருப்பி கொடுப்பதும் வழக்கமாகஇருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், சிறுசேமிப்பு முடிவடைந்த நிலையில் கடன்பெற்ற சிலர் பணத்தை திருப்பி கொடுக்க காலதாமதம் ஆகியிருக்கிறது. இதையடுத்து உறவினர் முறையான மேல்பாலையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார் சிறுமி.
அதற்கு ஜான் பிரிட்டோ, `நீ உனது தோழிக்கு அவசர தேவை எனக்கூறி உன் அக்காவிடம் இருந்து 5 பவுன் தங்க நகை வாங்கிக்கொண்டு வா. அதை நான் முன் தேதியிட்டு கூட்டுறவு வங்கியில் விவசாய நகைக்கடனாக அடகு வைத்து ஒருலட்சம் ரூபாய் வாங்கலாம். அதில் 50,000 ரூபாயை உனக்கு தருகிறேன். 50,000 ரூபாயை நான் எடுத்துக்கொள்கிறேன். தமிழக அரசு உடனடியாக தங்கநகைக் கடனை தள்ளுபடி செய்யும். அப்போது நகையை எடுத்து உன் அக்காவுக்கு கொடுத்துவிடலாம். இதன்மூலம் உனது கடனும் அடையும், நகையும் கிடைக்கும்' எனக்கூறியிருக்கிறார்.
இதை நம்பி அக்காவிடம் இருந்து ஐந்து பவுன் நகையை வாங்கி ஜான் பிரிட்டோவிடம் கொடுத்திருக்கிறார் மாணவி. நகையை வாங்கியபிறகு பணம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் ஜான் பிரிட்டோ. பணம் இல்லாமல் இருந்தால் நகையையாவது திருப்பித்தா என மாணவி கேட்டிருக்கிறார். அதற்கு ஜாண் பிரிட்டோ, ராணுவத்தில் இருக்கும் எனது நண்பர் சஜித் என்பவரிடம் உனது பணப்பிரச்னையை சொல்லியிருக்கிறேன். உன் செல் நம்பரையும் கொடுத்திருக்கிறேன், அவரிடம் பேசு' எனக்கூறியிருக்கிறார்.
இதையடுத்து ராணுவ வீரரான சஜித் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் அந்த மாணவியிடம் பேசியிருக்கிறார். முதலில் `அண்ணனைப்போல நினைத்து பேசு, உனக்கு உதவுகிறேன்’ என தூண்டில் போட்டிருக்கிறார் சஜித். பின்னர், `நீ உன் அக்காவிடம் இருந்து 5 பவுன் நகை வாங்கியதை அக்காவின் கணவரிடம் சொல்லி குடும்பத்தை பிரித்துவிடுவேன். அதன்பிறகு உங்கள் குடும்பமே தற்கொலை செய்யும் நிலை ஏற்படும். நான் இதுபற்றி சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் வீடியோ காலில் நிர்வாணமாக என்னிடம் பேச வேண்டும்’ என சஜித் மிரட்டி இருக்கிறார்.
மிரட்டலுக்கு பயந்து மாணவி இரண்டு முறை நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாக தெரிகிறது. அந்த வீடியோவை பதிவுசெய்து வைத்த சஜித், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக கூறி மாணவியை மிரட்டியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்த சஜித், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை உறுதிசெய்துவிட்டு நள்ளிரவில் அங்கு சென்று அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Also Read: சட்டமன்றத்தில் 'பாலியல் வன்கொடுமை' குறித்து சர்ச்சை பேச்சு - மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ!
மேலும் சஜித் தனது நண்பர்களான லிட்டில் ஜாண், ராணுவ வீரர் கிரீஸ் ஆகியோருக்கு அந்த வீடியோவை அனுப்பியிருக்கிறார். அவர்கள் இருவரும் அந்த மாணவியை மிரட்டி பணியவைக்க பார்த்திருக்கிறார்கள். சுதாரித்துக்கொண்ட மாணவி இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸார் விசாரணை நடத்தி ஜான் பிரிட்டோ, லிபின் ஜாண் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களான சஜித், கிரீஸ் ஆகியோரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ராணுவ வீரர்களுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3F7aKVx
via
