``ரூம் போட்டு யோசிச்சு வழக்கு போடுறாங்க!" - கோவை ஆர்ப்பாட்டத்தில் வேலுமணி பேச்சு!

0

தி.மு.க அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

எஸ்.பி வேலுமணி

Also Read: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: கூல் தங்கமணி; வேலுமணி பாணியில் போராட வந்தவர்களுக்கு தக்காளி சாதம்

அப்போது பேசிய அவர், ``கோவை மாவட்டமே திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க எழுச்சி பெற்றால் யாரும் தாங்க மாட்டீர்கள். ஆட்சி அமைத்த 7 மாதங்களில் மிகப்பெரிய எதிர்ப்பை தி.மு.க அரசு சந்தித்திருக்கிறது.

தேர்தலின் போது 525 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றியிருக்கிறாரகள். முக்கிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். டீசல் விலையை குறைத்தால் தான் விலைவாசி குறையும். கோவையை முழுமையாக வளர்ச்சி அடையச் செய்ததால் தான், இங்கு அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம்.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க வெற்றி பெற்றதால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் கட்டப்பஞ்சாயத்து வசூல், கந்துவட்டி பிரச்னை இல்லை. போலீஸாரும் சரியாக வேலை செய்தனர்.

ஆனால் இப்போது போலீஸாரே தேவையில்லாத வேலைகளை செய்கின்றனர். தி.மு.க ஆட்சி நிலைக்காது. அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் ரெய்டுகள் மூலமும், பொய் வழக்குகள் மூலமும் மிரட்டிப்பார்க்கிறார். எதற்கும் தயாராக இருக்கிறோம். திமுக என்ன தப்பு செய்தாலும் தட்டிக்கேட்போம்.

மு.க. ஸ்டாலின்

ஸ்டாலினை எதிர்த்து பேசினால் என்னென்ன பொய் வழக்கு போடலாம் என்று ரூம் போட்டு யோசிக்கிறார்கள். ஆனால், மக்கள் எங்களோடு இருக்கின்றனர். கோவை அமைதியான ஊராக இருந்தது, இப்போது அமைதி இல்லை. தொழில் செய்ய முடியவில்லை. தொட்டதுக்கெல்லாம் வசூலுக்கு வருகிறார்கள்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yygHsa
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*