`நல்ல விஷயங்கள் நடக்க காலமெடுக்கும்' என்ன சொல்லப் போகிறாய் படம் குறித்த இயக்குநரின் ட்விட்டர் பதிவு

0

`என்ன சொல்லப் போகிறாய்' திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். `குக் வித் கோமாளி' அஸ்வின் குமார், அவந்திகா, தேஜு அஸ்வினி, `குக் வித் கோமாளி' புகழ், ஆகிய பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம், `என்ன சொல்லப் போகிறாய்'. இத்திரைப்படத்தை ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தினை `ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் தயாரித்திருக்கிறார். படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு சமீபத்தில் நடைபெற்றது.

என்ன சொல்லப் போகிறாய் இயக்குநரின் ட்வீட்

இவ்விழாவில் , திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த அஸ்வின் குமார் பேசியது சர்ச்சைகுள்ளானது. அதன்பிறகு அஸ்வின் அதற்காக வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். மேலும், கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில், திரைப்படத்தின் ரீலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுள்ளதாக படத்தின் இயக்குநர் தெரிவித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. தொழிற்நுட்ப காரணங்களாலும் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கபட்டிருகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இத்திரைப்படம் ஜனவரி 2022 இல் வெளியாகும் என்று இயக்குனர் ஹரி ஹரன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில், `` நல்ல விஷயங்கள் நடக்க காலமெடுக்கும். என்ன சொல்லப் போகிறாய் படம் எனக்கு ஏற்பட்ட சிறந்த விஷயம். அது வெளியாக கொஞ்சம் காலம் எடுக்கிறது. 2022 ஜனவரியில் திரையரங்கில் சந்திப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.



from தமிழ் சினிமா https://ift.tt/3dZ1FSO
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*