``சினிமாவுக்கு சாதி, மதம் இல்லை"- கமல் ஹாசன் பேச்சு!

0

சினிமாவுக்கு சாதி, மதம் இல்லை, கமல் ஹாசன் பேச்சு!!

அசோக் செல்வன், ஜெய் பீம் "ராசாகண்ணு "புகழ், மணிகண்டன், நாசர், அபி ஹாசன், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் எனப் பலர் நடித்திருக்கிற திரைப்படம்,"சில நேரங்களில், சில மனிதர்கள் ". இத்திரைப்படத்தை, விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ராதன், இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெய் பீம் "ராசா கண்ணு "புகழ் மணிகண்டன், இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அஜ்மல் கானின் ஏ.ஆர் என்டெர்டைன்மெண்ட் , ரவீந்திரனின் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் கமல் ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்றனர். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு கமல் ஹாசன் கலந்துகொள்ளும் திரைப்பட விழா இது.

இவ்விழாவில் பேசிய கமல்,`` சினிமாவிற்கு சாதி, மதம் எதுவும் கிடையாது, யார் என்ன கூறினாலும் பரவாயில்லை, சினிமாவிற்கு சாதி மதம் கிடையாது, இங்கு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும்தான் என்று குறிப்பிட்டார்.சினிமா ரசனைக்கு குஞ்சென்றும், மூப்பென்றும் தெரியாது, நெருப்பு பற்றிக்கொண்டால் பிடித்துக்கொள்ளும், அப்படி பிடித்தவர்களை இங்கு எண்ணிக்கை கூற முடியாது என்று குறிப்பிட்டர். பாலு மகேந்திரா என் வாத்தியார், வாழ்க்கை எப்பொழுதும் கற்றுக்கொடுத்து கொன்டே தான் இருக்கும், அதில் என் வயதிலும், என்னைவிட வயது குறைவானவர்களும் எனக்கு வாத்தியராக இருந்திருக்கிறார்கள். "சில நேரங்களில் சில மனிதர்கள்" மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எனது திரைப்படமான குருதிப்புனல் எனும் தலைப்பு கொண்ட நாவலை, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளார், தலைப்பு குறித்து அவரிடம் கேட்கையில், குருதிப்புனல் எனும் வார்த்தை கம்பராமாயணத்தில் உள்ளது, அது எல்லாருக்கும் சொந்தம் என்று இந்திரா பார்த்தசாரதி கூறியதாக, கமல் ஹாசன் குறிப்பிட்டார். மேலும், கொரோனா தொற்றிலிருந்து நாம் எல்லாம் மீண்டு வந்தாலும், ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் எனவும், மழை நேரத்தில் குடிசைப் பகுதி மக்களைப் பார்வையிட்டபோது வராத தொற்று, அமெரிக்கா சென்றபோது எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது" என்று குறிப்பிட்டடார். மேலும் செருப்பு அணிவதை கௌரவமாக நினைப்பதைப்போல், முகக்கவசம் அணிவதையும் கௌரவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.



from தமிழ் சினிமா https://ift.tt/3GKPe9s
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*