``ஜெயலலிதா இறந்தபோது சசிகலாதான் அதிமுக-வை காப்பாற்றினார்!” - மன்னார்குடியில் சீமான் பேச்சு

0

நகராட்சி, மாநாகராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்ததோடு, சசிகலாவுக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை தெரிவித்தார். சசிகலா குடும்பத்தினரின் அதிகார மையமாகவும், அடையாளமாகவும் விளங்கும் மன்னார்குடியில் சீமான் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அனலை கிளப்பி வருகிறது. சீமான் இப்படி பேசியிருப்பது குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீமான்

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ``அதிமுக என்ற கட்சி இருக்கிறதா... இயங்குகிறதா? என்றே தெரியவில்லை. அதிமுக எதிர்க்கட்சிக்கான வேலையை செய்யவில்லை. எதிர்க்கட்சியாக செயல்படவே இல்லை. ஒ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நாங்கள் தான் தமிழ்நாட்டில் எதிரிக்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கேள்வி கேட்பதால்தான் ஆட்சியாளர்கள், சில வேலைகளையாவது செய்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read: மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு: சீமான் எழுப்பும் குரலுக்குப் பின்னால் இருப்பது என்ன?

நாங்கள் ஊடகங்களை சந்தித்து அரசின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒ.பி.எஸ்-ஸூம் இ.பி.,எஸ்-ஸூம் ஊடகங்களை சந்திப்பதே இல்லை. தமிழக அரசின் செயல்பாடுகளை கேள்விகள் கேட்கவோ, குறைசொல்லவோ, இவர்களுக்கு எந்த ஒரு தகுதியும் உரிமையும் இல்லை. அதிமுக-வுக்குள் நடக்கும் விவகாரங்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் அம்மையார் சசிகலா மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எங்களுக்கு குடும்ப ரீதியான உறவு உண்டு. நான் அவரை சந்தித்தபோது... ஏன் சந்தித்தீர்கள் / எதற்காக சந்திந்தீர்கள் என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது எனது விருப்பம். சசிகலா இல்லையென்றால் அதிமுக என்ற கட்சியை இவ்வளவு காலம் கொண்டு வந்திருக்க முடியாது என்பதுதான் எனது கருத்து. ஜெயலலிதா இறந்தபோது, அந்த கட்சியை காப்பாற்றி, பதவியை தக்க வைத்ததே சசிகலா தான். இது எல்லோருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கும் நல்லாவே தெரியும்.

அதிமுக செயற்குழுவில் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ஆனால் இப்ப தங்களோட வசதிக்கு ஏற்ப பேசுகிறார்கள்’’ என தெரிவித்த சீமான், காவல்நிலை மரணம், ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்டவைகள் குறித்து காரசாரமாக பேசினார். ``காவல் நிலைய மரணங்கள் குறித்த வழக்குகளில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்ட தி.மு.க., தற்போது மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை அடக்குகிறது. நீதிபதிகள் மக்களுக்கு பொதுவானவர்களாக இருக்க வேண்டும். நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால் சில நீதிபதிகள் திமுக-வின் மாவட்ட செயலாளர்களை விடவும் தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்கிறார்கள்.

சீமான்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்கள் விடுதலையில் திமுக அரசு நேர்மையாக செயல்படவில்லை. ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என சட்ட அமைச்சர் ரகுபதி சொல்கிறார். 35 ஆண்டுகள் காத்திருந்தது போதாதா. சட்ட விதி 161-ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கமே இவர்களை விடுதலை செய்ய முடியும். ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை என ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை சொன்னார். தற்போது திமுக தானே இங்கு ஆளுங்கட்சியாக உள்ளது. ஏன் அதை செய்ய மறுக்கிறார்கள்.

மாரிதாஸ் கைது செய்யப்பட்ட விவகாரம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. எதிர்க் கட்சியாக இருந்த போது கருத்து சுதந்திரம் குறித்து பேசிய தி.மு.க-வினர், தற்போது கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கின்றனர். ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காகதான் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்” என தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/320vHCS
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*