`இனி நாங்கள் கணவன் மனைவியாக நீடிக்க முடியாது'- இசையமைப்பாளர் டி.இமானின் பதிவு

0

இசையமைப்பாளர் டி.இமான், தன் மனைவியை விவகாரத்து செய்துவிட்டதாக இன்று அறிவித்திருக்கிறார்.

விஜய்யின் 'தமிழன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். 'வீரம்', 'நம்ம வீட்டுப் பிள்ளை', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உட்பட பல படங்களுக்கு இசைமைத்தவர். இவருக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிக்கா ரிச்சர்ட் என்பவருக்கும் கடந்த 2008-ல் திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து இமான் இன்று ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இமான் அறிவிப்பு

’என்னுடைய நலம் விரும்பிகள், இசையை நேசிப்பவர்கள், எனக்கு எப்போதும் உறுதுணையாய் இருப்பவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வது...

வாழ்க்கை நம்மை வெவ்வேறு பாதைகளில் அழைத்துச் செல்லும் போது, நானும் மோனிக்கா ரிச்சர்டும் கடந்த நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்துவிட்டோம். இனி நாங்கள் கணவன் மனைவியாக நீடிக்க முடியாது.

என் நலம் விரும்பிகளும், இசை ரசிர்களும் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்குச் செல்லும் வகையில் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.



from தமிழ் சினிமா https://ift.tt/3ezQSiu
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*