"`ஜெய் பீம்' வக்கீல் சந்துருவாக நடிக்க முதல் சாய்ஸ் யார் தெரியுமா?"- சூர்யா சொன்ன ரகசியம்

0
'தீரன் அதிகாரம் ஒன்று', 'ஜெய் பீம்', 'வலிமை' படங்களின் கலை இயக்குநர் கதிர், சென்னை அருகே உள்ள வானகரத்தில் திருமண மண்டபம் ஒன்றை கட்டியிருக்கிறார். நேற்று நடந்த இதன் திறப்பு விழாவிற்கு நடிகர்கள் சிவகுமார், ஆர்.கே.செல்வமணி, கலை இயக்குநர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் பங்கேற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருதுவிடம் பேசினேன்.

"கதிர் அவருக்கு நெருக்கமா இருந்தவங்களை அழைச்சிருந்தார். நானும் போயிருந்தேன். திறப்பு விழாவில் ஓவியர்கள், கலை இயக்குநர்கள், திரையுலகினர்னு பலர் பங்கேற்றாலும், இது நண்பர்களின் கெட்டுகெதர் போல அமைஞ்சிடுச்சு. விழாவுக்கு நான் புறப்பட்ட போது சிவகுமார்கிட்ட இருந்து போன் வந்திடுச்சு. 'வா சேர்ந்து போகலாம்'னு சொல்லிட்டார். அதனால அவர் வீட்டுக்குப் போயிட்டேன். அங்கே போனதும் சூர்யாவும் இருந்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரமா அவங்க வீட்ல ஒண்ணா உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். 'ஜெய் பீம்' படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால, படத்தை பத்தின விஷயத்தை சூர்யாகிட்ட பகிர்ந்துகிட்டேன்.

கலை இயக்குநர் கதிர் திருமண மண்டப திறப்பு விழா
கலை இயக்குநர் கதிர் திருமண மண்டப திறப்பு விழா
கலை இயக்குநர் கதிர் திருமண மண்டப திறப்பு விழா

"'இந்தப் படத்தை முதல்ல சின்ன அளவுலதான் பண்றதா இருந்துச்சு. கொஞ்சம் வளர்ந்ததும் விஜய் சேதுபதி வச்சு பண்ணலாமானுகூட பேச்சு வந்துச்சு. அப்புறம் ஷேப் பண்ணப் பண்ணப் புராஜெக்ட் நல்லா வந்துடுச்சு. எனக்கும் இதை நானே ஏன் பண்ணக்கூடாதுனு தோணுச்சு. படத்துக்குள்ள வந்துட்டேன்'னு சூர்யா சொன்னார். இப்படி உரையாடல் அரை மணிநேரம் நேரம் போனது தெரியாமல் போச்சு. சிவகுமாருடன் மண்டபத்துக்கு போனதும், அங்கே கலை இயக்குநர்கள் ராஜீவன், முத்துராஜ், பிரபாகர்னு நிறைய பேர் இருந்தாங்க. ஓவியக் கல்லூரியில் எங்களோட படிச்ச நண்பர்களும் நிறைய பேர் இருந்தாங்க. கிட்டத்தட்ட காலேஜ் கெட்டுகெதர் மாதிரி விழா அமைஞ்சிடுச்சு. சந்தோஷமா இருக்கு" என்கிறார் டிராட்ஸ்கி மருது.



from தமிழ் சினிமா https://ift.tt/3lYNMIR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*