`வளைகாப்பு ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா?' - கவனம் ஈர்த்த திருவாரூர் ஆட்சியரின் விளக்கம்

0

கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது என்பது, வெறும் சம்பிரதாய சடங்கு மட்டுமல்ல, இதில் அறிவியல் பூர்வமான காரணங்களும் அடங்கியுள்ளன. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணன் அளித்த விளக்கம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

திருவாரூர் ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணன்

இதில் 100 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 11 வகையான சீர்வரிசைப் பொருள்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் ஆகியோர் வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ``ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது, அது கருவாக உருவான நாளிலிருந்தே தொடங்கிவிடுகிறது. இதனை மனதில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியமான உடல்நலத்தோடு இருக்கும்.

Also Read: `கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து முக்கியம்!' - திண்டுக்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

இதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிதான் வளைகாப்பு. வளைகாப்பின்போது, கர்ப்பிணிப் பெண்கள் மனதளவில் உள்ளார்ந்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

வசதி, வாய்ப்புக் குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற பார்வையுடன் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டமாக சமுதாய வளைகாப்பு திட்டம் அமைந்துள்ளது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் இந்தத் திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.

கர்ப்பிணி (Representational Image)

Also Read: மகப்பேறுக்கு தயாரான கர்ப்பிணி ஊழியர்; குட்டி வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் தந்த அரசு அலுவலக ஊழியர்கள்!

இந்தத் திட்டத்தில் வேறு சில முக்கியமான நோக்கங்களும் உள்ளடங்கியுள்ளன. பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகாலப் பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடையச் செய்து அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், ஆரோக்கியமான, அறிவான குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்தல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள் மற்றும் குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதை உறுதி செய்தல் போன்ற பல்வேறு தகவல்கள் கர்ப்பிணி பெண்களுக்கு எடுத்துக் கூறி வழிகாட்டப்படுகிறது’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DUs5j3
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*