புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் அமைச்சர் சந்திர பிரியங்கா சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் பெண்கள் வாகன லைசென்ஸ் பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கெனத் தனியாக ஒருநாள் ஒதுக்கினால் நன்றாக இருக்குமென முடிவு செய்தோம்.
அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை (பிங்க் லைசென்ஸ் டே) சிறப்பு முகாம்கள் நடத்த கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். கடந்த சனிக்கிழமை அன்று முதல்வர் தலைமையில் அதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, லைசென்ஸ் பெறுவதற்கு முழுக்க முழுக்கப் பெண்களுக்காக மட்டுமே என வாரந்தோறும் ஒரு நாளினை ஒதுக்கி இருப்பது இந்தியாவிலேயே நமது புதுச்சேரியில்தான் முதல் முறை. அதனை நினைத்து ஒரு பெண் அமைச்சராக மிகவும் பெருமை அடைகிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுனர் லைசென்ஸ் வழங்க விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்படும். புதியதாக 200 பேருந்துகள் மத்திய அரசு மூலம் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தனியாக பிங்க் கலர் பேருந்து இயக்க முடிவெடுத்திருக்கிறோம். தமிழகத்தில் பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்கின்றனர்.
Also Read: `புதுச்சேரி தலைமைச் செயலருக்கு வாரன்ட்!’ -நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி
அதேபோல பிங்க் கலர் பேருந்து இயக்கப்படும்போது பெண்கள் கட்டண்மில்லாமல் பயணிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவோம். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தி அதனுடன் ஜி.பி.எஸ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3s6iiV0
via
