தனுஷ், பாரதிராஜா, நித்யாமேனன் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' பட அப்டேட்.

0

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' வரும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரக்கின்றன.

தனுஷ் இப்போது தமிழில் கார்த்திக் நரேனின் 'மாறன்', மித்ரன் ஜவஹரின் 'திருச்சிற்றம்பலம்', செல்வராகவனின் 'நானே வருவேன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் செல்வராகவனின் படம் தவிர, மீதமுள்ள இரண்டு படங்களையும் தனுஷ் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார். அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்'. படத் தலைப்பில் தான் பக்தி மணம் கமழுதே தவிர, இது முழுக்க முழுக்க குடும்பக் கதை. ஃபேமிலி டிராமா. 'யாரடி நீ மோகினி', 'உத்தமபுத்திரன்' மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். தனுஷின் கரியரில் ஃபேமிலி ஆடியன்ஸை அதிக அளவில் கவர்ந்த படம் 'யாரடி நீ மோகினி'. அதைப் போல மீண்டும் ஒரு ஃபீல் குட் படமாக பண்ண வேண்டும் என்பது தனுஷின் நீண்ட வருட ஆசை.

தனுஷ்

Also Read: `ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கணும்னு சொன்னதுமே... !' - `ராஜா ராணி' அர்ச்சனா ஷேரிங்ஸ்!

அதற்கேற்றார் போல படத்தை தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸும் அப்படியே விரும்பியதில் இந்த கூட்டணி கைகோர்த்திருக்கிறது. இப்படத்தில் தனுஷ் தவிர பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷிகண்ணா என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. படத்திற்கு இசை அனிருத். அனிருத்- தனுஷ் கூட்டணி என்றாலே ஹிட் கூட்டணி என்பதால், தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். முழுப்படமும் சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோ மற்று, சென்னையில் சில இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளன. பாடல் காட்சிக்காக பொள்ளாச்சி சென்றனர். ஆனால், சில சூழல்களால் அந்த பாடலை காரைக்குடியில் படமாக்கியுள்ளனர். படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், முக்கிய கதாநாயகி நித்யாமேனன் தானாம். மற்ற இருவருக்கும் நல்ல ரோல்தான். சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ்- நித்யாமேனன் இணைந்து ஆடும் வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது இப்படத்தின் படப்பிடிப்பில்தான். அடுத்த ஆண்டு மார்ச்சில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதால், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தனுஷின் 44 வது படமாகும்.



from தமிழ் சினிமா
via Umn news Tamil


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*