`வலிமை' விசில் தீம்: படத்தில் இடம்பெறும் காட்சி இதுதான்!

0

அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் நெருங்குவதால், அப்டேட் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது 'வலிமை' விசில் தீம் வீடியோ வெளியிட்டு உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'வலிமை'யில் அஜித்திற்கு ஜோடி கிடையாது. ஹீமா குரேஷி அஜித்துடன் பணியாற்றும் போலீஸ் ஆக நடித்துள்ளார். இப்படத்திற்கு சென்ஸாரில் யு/ஏ கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த அப்டேட் ஆக இன்று வெளியான 'விசில் தீம்' குறித்து 'வலிமை' வட்டாரத்தில் விசாரித்தேன். படத்தின் கதை ரொம்பவே சிம்பிள் லைன்தான். கிளிம்ப்ஸ், மேக்கிங் வீடியோக்கள் 'வலிமை'யை பக்கா ஆக்‌ஷன் கதை போல காட்டினாலும், படம் குடும்பத்தைக் கவரும் அம்சங்களுடன்தான் தயாராகியிருக்கிறது.

வலிமை

'விஸ்வாசம்' படத்தில் ஃபேமிலி சென்டிமென்ட் அஜித்திற்கு ஏகத்திற்கும் கைக் கொடுத்ததில், அதே போல ஜானரில் படங்கள் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அம்மா- மகன் சென்டிமென்ட்டோடு 'எதிர்காலத்தில் நம்மள சுத்தி இப்படியெல்லாம் குற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கு' என்ற அழுத்தமான ஆக்‌ஷன் அதகளமும் படத்தின் கதைக்கரு. அஜித் இன்ட்ரோ ஆகும் ஆரம்பகாட்சியில் இந்த விசில் தீம் இடம்பெறுகிறது. அதன்பிறகு ஆக்‌ஷனில், ரேஸில் அஜித் அதிரடி பண்ணும் இடங்களில் இந்த விசில் தீம் இடம்பெறுகிறது. அதையே இப்போது தனி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்து ஒரு சிங்கிள் ஸாங் லிரிக் பாடல் வரிகளுடன் வீடியோவோ அல்லது, புத்தம் புது டீசரோ புத்தாண்டையொட்டி வரவிருக்கிறதாம்.



from தமிழ் சினிமா https://ift.tt/3qkM7yr
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*