கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி, 10-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த சனிக்கிழமை அந்தச் சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து, மகளைக் காணவில்லை என்று அவரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர். அதேபோல, சிறுமி வீட்டிலும் அவரைத் தேடிவந்தனர்.
இதற்கிடையே, சிறுமி வீட்டின் அருகில் ஒரு முட்புதரிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் தூய்மைப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவர்களும், அந்தக் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், துணியில் சுற்றப்பட்டு ஒரு பெண் சடலம் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதையடுத்து, உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையில் இறங்கினார்கள். அதில், அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது.
பின்னர், சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமி கடைசியாக செல்போனில் பேசியபடி சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது. பகுதி மக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீஸார், சிறுமி எதற்காகக் கொலை செய்யப்பட்டார், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா எனப் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
Also Read: கோவை மாணவி தற்கொலையும், சமூக அவலமும் - மாறவேண்டியது யார்? மாற்றியமைக்கப்பட வேண்டியது என்ன?
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3p1VbsW
via
