கோவை, சூலூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள தொழிலாளி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். நேற்று குழந்தைகளின் அம்மா வேலைக்குச் சென்றுள்ளார். குழந்தைகளின் அப்பா, தன் நண்பர் தனசேகர் என்பவருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவரது 4 வயது குழந்தையும் வீட்டில் இருந்துள்ளார். குழந்தையின் தந்தை கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சற்று கருகிய வாசனை வந்துள்ளது.
வீட்டுக்குள் சென்றவர் தன் குழந்தை எரிந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அருகிலேயே தனசேகரும் காயத்துடன் இருந்தார். குழந்தை பரிதாபமாக இறந்துகிடக்க, தனசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பர் வெளியேறிய உடன், தனசேகர் குழந்தையை சிறார் வதை செய்துள்ளார்.
இதில் குழந்தை உயிரிழந்துவிட குழந்தையின் மீது துணிகளை போட்டு எரித்துள்ளார். மேலும், சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக காஸ் சிலிண்டரின் டியூப்பை உருவி தீ வைத்திருக்கிறார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது தனசேகர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/oZbwAaQ
via
