``வெளியூர்ல இருந்து கத்தி, பிளேடு பொருள்களோட குண்டர்கள இறக்கிருக்காங்க!” - கொதிக்கும் வேலுமணி

0

கோவை தேர்தல் களத்தில் அ.தி.மு.க, தி.மு.க இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இரண்டு கட்சிகளும் பரிசுப் பொருள்களையும், பணத்தையும் வாரி வழங்கி வருகின்றனவாம். அமைச்சர் செந்தில் பாலாஜி தனது கரூர் டீமை களத்தில் இறக்கியது, அதிகாரிகளை வைத்து லாபி செய்வது அ.தி.மு.க-வுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க போராட்டம்

தேர்தல் நேர்மையாக நடைபெற துணை ராணுவத்தை அழைத்து வரவேண்டும் என்று வேலுமணி நேற்று மாலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், இன்று காலை முதல், எம்.எல்.ஏ-க்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து வேலுமணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ``இந்தியாவில எங்கயும் இல்லாத கொடுமை இங்கதான் நடக்குது. இதுக்கு முன்னாடி நிறைய பிரச்னை இருந்தாலும், 20 வருஷமா நிம்மதியா இருக்கோம்.

வேலுமணி

கோவை மக்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் பெரிய ஆபத்து இருக்கு. மோதல் நிலை ஏற்படவும் வாய்ப்பிருக்கு. வெளியூர்ல இருந்து கத்தி, பிளேடு பொருள்களோட குண்டர்கள இறக்கிருக்காங்க.

வெளியூர்கார குண்டர்கள், ரெளடிகள நம்ம ஊர்ல இருந்து வெளியேத்துங்க. துணை ராணுவத்தை கூப்பிடுங்க. இல்லாட்டி எல்லா இடத்துலயும் தி.மு.க ஜெயிச்சுருச்சுனு அறிவிச்சுடுங்க. மக்களை நேரடியா சந்திதுச்சு ஜெயிக்கலாம். இது நியாயமா.” என்று வேலுமணி கொதித்தார்.

வேலுமணி

இதேபோல முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏ-க்களும் தங்களது ஆதங்களை கொட்டித் தீர்த்தனர். 2 மணி நேரத்தை கடந்தும் போராட்டம் தொடர்கிறது!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/CyFpHKg
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*