மேயர் ரேஸில் மகள்; தந்தையான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது திருமணம் மீறிய உறவு புகார் அளித்த நபர்!

0

நாகர்கோவில் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தவர் நாஞ்சில் முருகேசன். இவர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை சிறார் வதை செய்ததாக 2020-ம் ஆண்டு எழுந்தப் புகாரைத் தொடர்ந்து, போலீஸார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே நாஞ்சில் முருகேசன் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்த தகவலறிந்து நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை தனிப்படை அமைத்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர் அ.ம.மு.க நிகழ்ச்சிகளில் தலைக்காட்ட ஆரம்பித்தார். அதன்பின்னர் சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அமைதியாக இருந்தார்.

இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தன் மகள் ஸ்ரீலிஜாவை நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் களம் இறக்கியுள்ளார். மேலும் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

Also Read: சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை! - போக்சோவில் கைதான இளைஞர்

பாலியல் வன்கொடுமை

தன் மகள் தேர்தல் களத்தில் இருக்கும் நிலையில், திருமணம் மீறிய உறவு காரணமாக பெண் ஒருவரின் கணவரைத் தாக்கியதாக இரணியல் காவல் நிலையத்தில் நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் குமார் என்பவர் சிகிச்சைப் பெற்று வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சென்று விசாரித்தோம். வில்லுக்குறியை அடுத்த திருவிடைக்கோடு பகுதியில் வசித்துவரும் குமார்,

கடந்த 11-ம் தேதி கூலி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, வீட்டுக்கு முன் கார் ஒன்று நின்றிருந்திருக்கிறது. அதைக் கண்ட குமார் வீட்டின் கதவை தட்டிப்பார்த்தபோது, திறக்காததால் ஜன்னலை உடைத்து பார்த்ததாகக் கூறுகிறார். அப்போது, குமாரின் மனைவியுடன் நாஞ்சில் முருகேசன் இருந்ததை அவர் பார்த்ததாகக் கூறுகிறார். அதனால், ஆத்திரமடைந்த குமார் தட்டிக்கேட்டதாகவும், வெளியே வந்த நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் மகேஷ் ஆகியோர் அவரைத் தாக்கியதாகவும் எங்களிடம் புகார் அளித்திருக்கிறார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

நாஞ்சில் முருகேசன்

இதுபற்றி நாஞ்சில் முருகேசனிடம் கேட்டதற்கு, ``உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கரணமாக ஒருவர் தூண்டுதல் பெயரில் என்மீது பொய் புகார் கொடுத்திருக்கிறார். அவர் தாக்கியதாக சொல்லும் சமயத்தில் நான் என் வீட்டில் இருந்தேன். அதற்கான ஆதாரம் இருக்கிறது. வேண்டுமென்றே என் மீது புகார் அளித்துள்ளார்" என்றார்.

Also Read: நாகர்கோவில்: தனித்துப் போட்டியிடும் சி.பி.எம் கட்சிக்கும் சேர்த்து வாக்கு சேகரித்த கே.எஸ்.அழகிரி!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/hzedLNH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*