வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை

0

 


வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை


நடிப்பில் மூன்று தலைமுறை கண்ட வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை.. ஏக்கத்தில் ரசிகர்கள் |

சென்னை: காமெடி நடிகராக பலருக்கும் பரிச்சயமான வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.


வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய காமெடியால் பலமுறை நடிகருடன் நடித்தவர் இன்று எங்கே போனார் என பலர் தேடி வருகின்றனர்.



picture

ரசிகர்களை கவர்ந்த காமெடி

பொதுவாக சினிமாவில் இன்றைக்கு பல நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலைமுறைக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை மூலமாகவும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்துள்ளார்.


ஐம்பது ஆண்டுகளைத் தாண்டிய சினிமா வாழ்க்கை

எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் நடிகர்களுடன் வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். சொல்லபோனால் இவருடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அதிலும் அந்த காலத்தில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம்வந்த பல நடிகர்களுக்கு போட்டியாக தனது இரட்டை அர்த்த நகைச்சுவைகளால் தனது தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு பலரை தனது ரசிகர்களாக உருவாக்கிக் கொண்டவர் தான் வெண்ணிரடை மூர்த்தி. இவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சீரியல்களிலும் களமிறங்க தொடங்கிவிட்டார்.


.

.

ஜீ தமிழில் இருந்து கிடைத்த பரிசு

வெண்ணிறாடை மூர்த்தி கலந்து கொண்ட மீண்டும் மீண்டும் சிரிப்பு நிகழ்ச்சி 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. அது இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பெரிய திரையில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தவர்கள் தான். இவர்களில் சிலர் சின்னத்திரையில் உதயமான நேரத்தில் அதை பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள். பெரியதிரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில் சின்னத்திரைக்கு வந்து இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது என்று கூறவும் செய்தவர்கள்தான். அந்த வகையில் தன்னுடைய காமெடி திறமையால் சின்னத் திரை ரசிகர்களையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தவருக்கு ஜீ தமிழில் இருந்து கிடைத்தது பம்பர் பரிசு.


நடிப்பை விட்டு விலக காரணம்

வெண்ணிறாடை மூர்த்திக்கு ஜோதிடத்தில் இருந்த திறமையை பார்த்து அவருக்கு ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஜோதிட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் வெறும் ஜோதிடத்தை மட்டும் கூறாமல் இடையிடையே புராணக்கதைகளையும் சுவாரசியமாக கலந்து கூறி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இஜிஇ டிவியில் கேரி ஆன் கிட்டு என்ற நகைச்சுவை தொடரை இயக்கி நடித்து இருக்கிறார். இப்படி திகில் காமெடி இரண்டிலும் தன்னை வெளிப்படுத்திய வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபகாலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. வயது மூப்பு காரணமாக இவர் தற்போது சினிமாக்களில் இருந்தும் சீரியலில் இருந்தும் விலகி இருக்கிறார்.


தற்போதைய நிலை

இவரது வித்தியாசமான நடிப்பால் இவரைத் தேடி இன்னமும் பட வாய்ப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இருந்தும் அதையெல்லாம் மறுத்து தனது சொந்த வீடான கோட்டூர்புரத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவரை மீண்டும் சினிமாக்களில் பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். என்றென்றைக்கும் திறமைக்கு மதிப்பு அதிகம் என்று சொல்வது போல இவர் மீண்டும் நடிப்பதற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் வயது மூப்பு காரணமாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இது சில ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருந்து வருகிறதாம்.


Umn news Tamil 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*