சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம்! – புதுச்சேரி நகராட்சி குறிப்பிடும் இடங்கள் எவை?

0

புதுச்சேரியில் வீடுகள், காலி மனைகள், சொத்துகள், வணிக உரிமம் மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு வரிகளை வசூலித்து வரும் புதுச்சேரி நகராட்சி, தற்போது வருவாயை பெருக்க புதிய புதிய வரி விதிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும் நகராட்சி, அதற்காக டெண்டர் கோரியிருக்கிறது. அதனடிப்படையில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கார்கள், மற்றும் கனரக வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படவிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு வீதிகளுக்கும் டெண்டர் ஆரம்ப தொகையை நிர்ணயித்து, அதற்கு செலுத்த வேண்டிய முன் வைப்பு தொகையும் நகாராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 31.3.3023 வரை ஓராண்டுக்கு தனியாருக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

நேரு வீதி

அதற்கான மின்னணு ஏலம் வரும் 25-ந் தேதி நடைபெறவுள்ளது. அதேபோல புதிய பேருந்து நிலையத்துக்குள் வர நுழைவு கட்டணம், எந்திரம் மூலம் வாகன எடை பார்க்க கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுதவிர முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம், சின்னமணிக்கூண்டு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட் உள் கடைகள், வெளிப்புற கடைகளில் அடிக்காசு வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. புராவிடன்ஸ் மால் எதிரில் உள்ள சிங்கார வேலர் திடல்.

2. புதிய பேருந்து நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள்.

3. பழைய சிறை வளாகப் பகுதி.

4. நேரு வீதியில் ராஜா தியேட்டர் முதல் போக்குவரத்து காவல் நிலையம் வரை.

5. அண்ணா சிலை சதுக்கம் முதல் ராஜா தியேட்டர் சிக்னல் வரை.

6. ராஜா தியேட்டர் சிக்னல் முதல் அதிதி ஹோட்டல் சிக்னல் வரை.

7. அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மணக்குள விநாயகர் கோயில் சுற்றியுள்ள பகுதிகள்.

8. பாரதி பூங்கா மற்றும் அரசு பொது மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள்.

9. துய்மா வீதி மற்றும் ரோமன் ரோலண்ட் விதிகள்.

10. செயின்ட் லூயி வீதிக்கு கிழக்கில் உள்ள பகுதிகள்.

11. பழைய துறைமுக சாலை டூப்ளே முதல் பழைய துறைமுக நுழைவாயில் வரை.

12. தெற்கு புல்வார்ட் சந்திப்பில் உள்ள டுப்லக்ஸ் சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள்.

13. எஸ்.வி பட்டேல் சாலை அதிதி ஹோட்டல் முதல் பழைய சாராய ஆலை வரை உள்ள பகுதிகள்.

14. தெற்கு மாட வீதியில் அண்ணா சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள்.

15. காசிம் வீதி என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் பெரிய வாய்க்கால் மீது அமைந்துள்ள பகுதிகள்.

16. மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்காவில் வடக்கு மற்றும் நியூட்டன் தியேட்டர் அருகில் உள்ள பகுதிகள்.

17. இந்திரா காந்தி சிலையில் வாசன் கண் மருத்துவமனை மருத்துவமனை வரையிலுள்ள பகுதிகள்.

18. உள்ளாட்சித்துறை எதிரில் அமைந்துள்ள காலி இடத்தில் உள்ள பகுதி.

19. நூறடி சாலை பாலம் முதல் ஆர்.டி.ஓ ஆபீஸ் வரை அமைந்துள்ள காலி இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்.

20. புதுவை மெரினா பீச் பகுதியில் அமைந்துள்ள பகுதிகள்.

நகராட்சியின் இந்த நடவடிக்கை புதுச்சேரி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/DVHTWPa
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*