கார்த்தி - ஜெயம் ரவி சந்திப்பு; அண்டர் வாட்டர் ஷுட்; 'பொன்னியின் செல்வன்' அப்டேட்!

0

நடிகர்கள் கார்த்தியும், ஜெயம் ரவியும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. கார்த்தியும் ஜெயம் ரவியும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார்கள். வந்தியத் தேவனாக கார்த்தியும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலான காட்சிக்களுக்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது நினைவிருக்கலாம். ஆனாலும் படத்தின் திருப்புமுனை காட்சிகள் படாமாக்கப்படாமல் இருந்து வந்தன. அதாவது கடலுக்கடியில் படமாக்கப்பட வேண்டியது, கோவிட் சூழலினால் எடுக்கமுடியாமல் இருந்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்

இப்போது அண்டர் வாட்டர் ஷூட்டிற்கான பர்மிஷன் மும்பையில் கிடைத்து விட, மளமளவென ரெடியாகிவிட்டது 'பொ.செ.' யூனிட். மும்பையில் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன . வந்தியத் தேவன் கப்பலிலிருந்து கடலில் குதித்து தப்பித்து ஓடும் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. தவிர, கார்த்தி, ரவி தொடர்பான பேட்ச் ஒர்க் சீன்களும் மும்பையில் ஷூட் செய்யப்பட்டுள்ளன. இந்த பேட்ச் ஒர்க்கில் ஐஸ்வர்யா ராய்யும் பங்கேற்றிருக்கிறார்.

கார்த்தி- ரவி

அண்டர் வாட்டர் லொக்கேஷனுக்கான பர்மிஷன் திடீரென கிடைத்ததில், இயக்குநர் மணிரத்னம் நடிகர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு படப்பிடிப்பில் இருந்தனர். படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி வர்மன், மும்பையில் இந்தியில் ரேவதி இயக்கத்தில் கஜோல் நடித்து வரும் படப்பிடிப்பில் இருந்தார். பொ.செ.' ஒர்க் இருக்கிறது படமாக்கிவிட்டு வருகிறேன. என ரேவதியிடம் பர்மிஷன் கேட்டிருக்கிறார் ரவிவர்மன். மணிரத்னம் படம் என்பதால் ரேவதியும் டபுள் ஓகே சொல்லி, ரவிவர்மனை அனுப்பி வைத்திருக்கிறார்.

கார்த்தி

மும்பையில் படப்பிடிப்பு முடித்துவிட்டு அன்று கார்த்தியும், ரவியும் ஒரே ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டிருக்கிறார்கள். அங்கே எடுத்த புகைப்படம்தான் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஜெயம் ரவிக்கு ஒரே ஒருநாள் மட்டும் ஒர்க் என்பதால், ஷூட்டை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார்.



from தமிழ் சினிமா https://ift.tt/fF3rXQp
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*