கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவின் 10-வது விழாவில் ஹைந்தவ சேவாசங்கம் சார்பில் நடந்த 85-வது இந்து சமய மாநாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து அண்ணாமலை பேசுகையில், ``நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க-வினர் அதிகமாக வெற்றிபெற்றுள்ளனர். தமிழ்நாடு அளவில் பா.ஜ.க 3-வது கட்சியாக வளர்ந்துள்ளது. தி.மு.க கூட்டணியில் 13 கட்சிகள் உள்ளன. பா.ஜ.க தனியாக வளர்ந்துள்ளது. உக்ரைன் நாட்டு போர் சூழலில் நமது பிரதமர் மோடி ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் ஒரே நேரத்தில் பேசக்கூடிய வல்லமை பெற்றவர். உக்ரைனில் இருந்து 12,000 மாணவர்களை பிரதமர் மீட்டுள்ளார். பாகிஸ்தான், சீனா மாணவர்கள் கூட நம் இந்திய நாட்டின் மூவர்ண கொடியை காட்டி ஊர் திரும்பியுள்ளனர். இதற்கு உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு இருக்கும் மதிப்பே காரணம்.
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்கும் என்றார்கள். அவர்கள் இதுவரை டெல்லி வரைதான் சென்றுள்ளனர். தமிழக மாணவர்களை மீட்க மூன்றரை கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறுகின்றது. அது அவர்கள் பஜ்ஜி சாப்பிடுவது போன்றவற்றுக்கு செலவு செய்திருப்பார்கள். நம் நாட்டு விமானபடை மூலம்தான் மாணவர்கள் மீட்கப்படுள்ளனர். தி.மு.க இந்து விரோத போக்கை கடைபிடிக்கிறது. மோடியை எதிர்க்க வேண்டும் என மம்தா, அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் கிளம்பியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது ஸ்டாலின் கிளம்பியுள்ளார். கோபாலபுரத்தில் பிறந்த காரணத்துக்காக ஸ்டாலின் பிரதமர் ஆக முடியுமா.
உபி-யில் வரும் 10-ம் தேதி தேர்தல் முடிவு வந்தபின் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் போக்கை மாற்றிக்கொள்வார். உபி-யில் உள்ள 400 இடங்களில் 300 இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். டாஸ்மாக் கடையில் மது விலை உயர்ந்துள்ளது. சரக்கு கடையை நம்பி அரசு நடத்துகின்றனர். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மதுவின் மூலம் வரும் ஒரு காசுகூட அரசுக்கு வேண்டாம் என கூறினார்.
2024-ல் பாஜக 400 இடங்களில் வென்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு எம்.பி-யை அனுப்பி, மத்திய அமைச்சராக ஆக்க வேண்டும். மண்டைக்காடு கோயில் மாசி விழாவில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்கின்றார்கள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை முன்னிலைப்படுத்துவது இந்து வாழ்வியல் முறை ஆகும். இந்து வாழ்வியல் முறை இளைஞர்களுக்கு சென்றடைய வேண்டும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/E1LT40F
via
