" `பேட்ட', `மாஸ்டர்'க்கு அப்பறம் தனுஷ் சொல்லிதான் `மாறன்' வாய்ப்பு கிடைச்சது!"- மாளவிகா மோகனன்

0
மாளவிகா மோகனன் - குறுகிய காலத்தில் பெரும் இளைஞர் கூட்டத்தை தன் ரசிகர்களாக மாற்றியவர். 'பேட்ட', 'மாஸ்டர்' எனத் தமிழில் தொடக்கமே ரஜினி, விஜய் படங்கள் அமைந்ததைத் தொடர்ந்து தற்போது தனுஷூடன் அவர் நடித்த 'மாறன்' டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. 'மாறன்' படம் குறித்து மாளவிகா மோகனன் நம்மிடையே குறித்து பகிர்ந்து கொண்டார்.
மாளவிகா மோகனன்

மலையாளத்துலதான் உங்க முதல் என்ட்ரி... அந்த வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?

"என்னோட அப்பா ஒளிப்பதிவாளர். சின்ன வயசுல இருந்தே போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும். சினிமாவுக்கு வருவேன்னு நினைக்கவே இல்ல. துல்கர் சல்மானுடைய 'பட்டம் போலே' (Pattam Pole) படம் என்னுடைய முதல் படம். இந்தப் படத்தோட வாய்ப்பு எதேச்சையா கிடைச்ச ஒண்ணு. மலையாளத்துல துல்கர் ஹீரோவாகி நாலு, அஞ்சு படம் பண்ணியிருந்த நேரம். அப்போ, இவருடைய 'பட்டம் போலே' படத்துக்கு அறிமுக ஹீரோயினா ஒருத்தர் வேணும்னு மம்மூட்டி தேடிக்கிட்டு இருந்தார். அப்போ இவருடைய கண்ணுல என் போட்டோ கிடைச்சது. இப்படிதான் சினிமாவுக்கு ஹீரோயினா வந்தேன்."

'மாறன்' படத்துக்குள்ள தாராவா நீங்க வந்த கதை?

"இந்தப் படத்துக்காக என்னை சிபாரிசு பண்ணுனது தனுஷ். கார்த்திக் நரேன்கிட்ட, 'தாரா கேரக்டருக்கு சரியா இருப்பாங்கன்னு' தனுஷ்தான் என்னைச் சொல்லியிருக்கார். ஒரு சீனியர் நடிகரா எப்படியெல்லாம் நடிக்கணும்னு மாஸ்டர் க்ளாஸ் மாதிரி சொல்லி கொடுத்திருக்கார் தனுஷ். எங்க ரெண்டு பேருக்கும் 'மேகி'னா ரொம்ப பிடிக்கும். ஆனா, ஷூட்டிங்ல ஹோட்டல் உணவுதான்!"

மாளவிகா மோகனன்

இந்தப் படத்துல உங்களோட ரோல் பத்தி சொல்லுங்க...

"மாஸ் கம்யூனிகேஷன் முடிச்சிட்டு பத்திரிகையாளர் ஆகணும்னு கனவோட இருந்தேன். இப்போ, 'மாறன்' படத்துல பத்திரிகையாளர் கேரக்டர்தான் பண்ணியிருக்கேன். 'தாரா'ங்குற கேரக்டர்ல டாம் பாய் மாதிரி வருவேன். எதுக்கும் பயப்படாத பொண்ணு. எப்போவும் வாய்ல சுவிங்கம் மென்னுட்டு திமிரா சுத்துற ஹீரோயின். என்னுடைய முந்தைய 'பேட்ட', 'மாஸ்டர்' படத்தைக் காட்டிலும் இதுல ரொம்ப ஸ்ட்ராங்கனா கேரக்டர். பட், இந்தப் படத்துலயும் நல்லா டான்ஸ் ஆடுறளவுக்கு பாட்டு இல்ல. ஏன்னா, அதோட கதைகள் அப்படி. இதுதான் ஒரே கவலை."

'மாறன்' கதையை கார்த்திக் நரேன் சொன்னப்ப, அதுல உங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ண விஷயம் என்ன?

"இந்தக் கதையை கார்த்திக் நரேன் என்கிட்ட சொன்னப்போ கதையில இருந்த அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. எப்போவும் வீட்டுல இருக்குற அண்ணன், தங்கச்சியை ஸ்க்ரீன்ல பார்க்கலாம். இது மட்டுமல்லாமல், ரியல் லைப்ல எனக்கொரு அண்ணன் இருக்கான். அவன்கிட்ட நான் பண்ணுற சேட்டைகளெல்லாம் படத்துல இருக்கு. படத்தோட முதல் பாதி முழுக்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கும். இரண்டாம் பாதி முழுக்கக் கதைக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும்."

மாளவிகா மோகனன்

உங்க போட்டோ ஷூட் சமீபத்துல இங்க செம வைரல்... தமிழ் சினிமா ரசிகர்களைக் கவனிக்கிறீங்களா? தமிழ்ப் படங்கள் எல்லாம் பார்ப்பீங்களா?

"என்னோட போட்டோ ஷூட் வைரலானது ரொம்ப சந்தோஷம். பாக்கறவங்க எல்லாரும், டயட்ல இருக்கீங்களானு கேட்பாங்க. பட், இப்போ நான் டயட் எதுவும் பாலோ பண்ணல. எனக்கு மணிரத்னம், வெற்றிமாறன் படங்கள் ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் படிக்கிறப்பவே நிறைய தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கேன். 'இருவர்' என்னோட ஃபேவரைட் படம். பிரகாஷ்ராஜ் பேசுற டயலாக்ஸ் நல்லாயிருக்கும். ஐஸ்வர்யா ராய் ரொம்ப க்யூட்டா இருப்பாங்க. நிறைய தமிழ்ப் படங்கள் பண்ணணும், நல்லா தமிழ் பேசணும்னு ஆசை".



from தமிழ் சினிமா https://ift.tt/azsIlhV
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*