கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப் பணிகள் நடந்து வந்தநிலையில், கோவை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.
இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் சம்மந்தமாக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்குநர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 139 கிமீ தொலைவுக்கு, மூன்று கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக, அவிநாசி சாலை கருமத்தம்பட்டி வரையிலும்,
சத்தியமங்கலம் சாலையில் உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்படும். இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் விரிவான ஆய்வுக்குப் பிறகு ஒரே நேரத்தில் செய்யப்படும்.
மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களில், அதற்கு இணையாக மெட்ரோ இயக்கப்படும். இதற்க தேவையான நிலம் கையகப்படுத்தப்படும். போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, மேல் பாலம்,
ஏற்கெனவே உள்ள சாலையைக் கடப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்து புதிய பகுதிகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் ஆய்வின் கீழ் எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/QZ1ujx2
via
