கரூர் : அதிமுக சொன்ன ரூ. 3 கோடி ஊழல் புகார்... 4 நெடுஞ்சாலை அதிகாரிகள் சஸ்பெண்ட்! - நடந்தது என்ன?

0

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ,தி.மு.க கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தி.மு.க சேர்ந்த கான்ட்ராக்டர் எம்.சி.சங்கர் ஆனந்த் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது முறைகேடு புகார் சுமத்தினார். தமிழக கவர்னர், கரூர் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் முதன்மை செயலாளர் என பல தரப்புக்கும் புகார் அனுப்பினார்.

அந்த புகாரில், `கரூர் மாவட்டம், ஈசநத்தம் முதல், வீரியப்பட்டி, மண்மங்கலம் முதல் நன்னியூர்புதூர், புகளூர் சர்க்கரை ஆலை முதல் சேலம் பைபாஸ் சாலை உட்பட பல்வேறு சாலைகள், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், போடப்பட்டுள்ளது. அங்கு, புதிதாக சாலைகள் அமைக்கு பணியோ அல்லது சீரமைக்கும் பணியோ, தற்போது வரை மேற்கொள்ளவில்லை. அப்படி இருக்கையில், அதிகாரிகள் உதவியுடன் போடாத சாலைக்கு, 10 கோடி ரூபாய் அளவில் பில் எழுதி பணம் எடுக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த, 10 கோடி முறைகேட்டில், 3 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததுள்ளது' என்று தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில், கான்ட்ராக்டர் சங்கர் ஆனந்தின் லாரியை எரித்ததோடு, லாரியில் இருந்தவர்களையும் தாக்கியதாக, தி.மு.க தரப்பில் வழக்கு கொடுக்கப்பட்டது. அந்த புகாரில், தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், 5 அ.தி.மு.கவினர் மீது வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக, நெடுஞ்சாலை துறை கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கோட்ட கணக்கர் பெரிசாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, நெடுஞ்சாலைகள் முதன்மை செயலாளர் உத்தவிட்டுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/9Rfsgjn
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*