தமிழ்நாடு முழுவதும் தினசரி தவிர்க்க முடியாத நிகழ்வாக, போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித்தொழில் செய்து வந்தார். அதேப் பகுதியைச் 4 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த 2019-ம் ஆண்டு செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு வந்தனர். விசாரணை முழுவதுமாக முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி செல்வராஜூக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து, குற்றவாளிக்கு விரைவாக தண்டணை பெற்று கொடுத்த துடியலூர் போலீஸாருக்கு, உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/OfFguni
via
