அதிரவைத்த ஜூ.வி கட்டுரை... மகேஸ்வரியை வளைத்துப் பிடித்த போலீஸ்! - ஒரே நாளில் அதிரடி

0

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கால் நூற்றாண்டு காலமாக ஒரு சாராய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிவைத்திருப்பவர்தான் மகேஸ்வரி. இதுவரை அவர்மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஏழு முறை குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. சமீபகாலமாக அவரது போதை பிசினஸும் அட்ராசிட்டியும் அதிகமாகியிருக்கின்றன. சமூக அக்கறையோடு அவரை எதிர்க்கும் இளைஞர்கள் மிரட்டப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள். அவரது சாராய விற்பனையை, வன்முறைச் செயல்களைத் தடுக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது போலீஸ் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மகேஸ்வரி

தலைமறைவாக இருந்தபடியே, வாணியம்பாடியையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மகேஸ்வரி குறித்து, 13.04.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "சாராய சாம்ராஜ்ஜியம்... 80 வழக்குகள்... 7 குண்டாஸ்... அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்!" என்ற தலைப்பில் 4 பக்க கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதழ் வெளிவந்த நேற்றைய தினமே திருப்பத்தூர் மாவட்டத்தில், அதிர்வலைகள் ஏற்பட்டன. வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் ஜூ.வி கட்டுரை குறித்த பேச்சுகளே பரபரப்பாக இருந்தது.

கைது

இதையடுத்து, வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா வாணியம்பாடிக்குச் சென்று, தாலுகா காவல் நிலையத்தில் மகேஸ்வரி மீதான வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். விரைந்து அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதையடுத்து. வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீஸார் மகேஸ்வரியை பிடிக்க அதிரடியாக களமிறங்கினர். அவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவே, போலீஸ் டீம் அங்கு விரைந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய நடத்திய தேடுதல் வேட்டையில், பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி, அவர் கணவர் சீனிவாசன், மகன்கள் உட்பட மொத்தம் 7 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/rT9nvKl
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*