ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் வெளிவந்த `பாஸ் என்கிற பாஸ்கரன்' நூறு நாள்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம். முழுக்க முழுக்க காமெடி என்டர்டெயினரான இந்தப் படம், ஆர்யாவின் திரைப் பயணத்திலும் ஒரு மைல் கல். சந்தானம் - ஆர்யா கூட்டணியின் அதிரி புதிரி கெமிஸ்ட்ரியும் பேசப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டில் வெளியான இப்படத்திற்கு, நீண்ட இடைவெளிக்குபின் இரண்டாம் பாகம் ரெடியாகிறது என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ்.எம், இப்போது ஹன்சிகாவை வைத்து வெப்சீரீஸ் ஒன்றை இயக்கி வருகிறார். தவிர, அடுத்து ஜெயம் ரவியை இயக்க ரெடியாகிவிட்டார். இந்தச் சூழலில், ராஜேஷிடம் 'பாஸ் 2' குறித்துப் பேசினேன்.
'''பாஸ்' படம் சூப்பர் ஹிட் ஆனதிலிருந்தே அதன் அடுத்த பார்ட்டை ஆரம்பிக்கறது பத்தி நான், ஆர்யா, சந்தானம் மூணு பேருமே அடிக்கடி பேசிக்குவோம். எல்லாருக்குமே அப்படி ஒரு படம் பண்ணனும் ஆசை உண்டு. ரொம்ப வருஷமாகவே நாங்க அதைப் பத்தி பேசிக்கறதுண்டு. ஆனா, 'பாஸ் 2' தொடங்குறது பத்தி இன்னும் எந்த முடிவுக்கும் யாரும் வரல. அந்தப் படம் அமையணும்னா, ஆர்யா சார் கால்ஷீட், சந்தானம் சார் கால்ஷீட்னு எல்லாம் ஒரே நேரத்துல கிடைக்கணும். சரியான நேரம், சரியான ஸ்கிரிப்ட் அமையும் போது எல்லாம் தானாக கைகூடி வரும்னு நம்புறேன். மத்தபடி அதை ஆரம்பிக்கறது நூறு சதவிகிதம் உறுதியாகலை.
இப்ப நான் ஹன்சிகா நடிப்பில் வெப்சீரீஸ் பண்ணிட்டிருக்கேன். இந்த மாசத்தோடு அதுக்கான வேலைகள் நிறைவு பெறும். அடுத்த மாசம் ஜெயம் ரவி சார் நடிக்கற படத்தை இயக்குறேன். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ தயாரிக்கிறாங்க. ஹீரோயின், இதர நடிகர்கள் தேர்வு இனிமேதான். ரவி சார் படத்தை ஆகஸ்ட் மாத மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறோம்" என்கிறார் ராஜேஷ்.எம்.
from தமிழ் சினிமா https://ift.tt/5V6Mop2
via Umn news Tamil
