Kangana Ranaut: வெளியானது `எமர்ஜென்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: இந்திரா காந்தியாக மாறிய கங்கனா!

0

பாலிவுட் படங்களில் அதிகளவில் நடித்து வருபவர் கங்கனா ரனாவத். நடிகை என்பதைத் தாண்டி தனது தடாலடியான கருத்துகளால் கவனம் பெற்றவர். `தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா, சவாலான வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்.

கங்கனா ரனாவத்

சமீபத்தில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தில் நடித்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான இவரின் `தாகத்' படம் முதல் நாளில் இருந்தே வசூலில் ஏமாற்றத்தைத் தந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது எமர்ஜென்சி என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில், மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தினுடைய படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. டார்கெஸ்ட் ஹவர், வேர்ல்ட் வார் இசட் மற்றும் தி பேட்மேன் போன்ற படங்களில் பணியாற்றிய ஆஸ்கர் விருது பெற்ற டேவிட் மலினோவ்ஸ்கி கங்கனாவை இந்திரா காந்தியாக மாற்றிருக்கிறார்.



from தமிழ் சினிமா https://ift.tt/s3dyS51
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*