WhatsApp சிஇஓ எச்சரிக்கை: இனிமேல் "அதை" டவுன்லோட் பண்ணாதீங்க.! ஏன் தெரியுமா? | WhatsApp CEO has issued warning to users, Android users should take heed

0

 

WhatsApp சிஇஓ எச்சரிக்கை: இனிமேல் "அதை" டவுன்லோட் பண்ணாதீங்க.! ஏன் தெரியுமா? | WhatsApp CEO has issued warning to users, Android users should take heed

Hey WhatsApp செயலி

அதாவது உண்மையான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாமல் போலியான அல்லது வாட்ஸ்அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட் தெரிவித்துள்ளார். குறிப்பாக Hey WhatsApp போன்ற செயலிகள் போலியானவை, ஆபத்தானவை என்றும், அவற்றை பதிவிறக்குவதை மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தவிர்க்க வேண்டும்

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாட்ஸ்அப் போன்ற சேவைகளை வழங்குவதாக கூறும் சில போலி தீங்கிழைக்கும் செயலிகளை பாதுகாப்பு ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. Heymods என்ற டெவலப்பரின் Hey WhatsApp போன்ற செயலிகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றை மக்கள் பதிவிற்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த போலி செயலிகள் பயனர்களுக்கு சில புதிய அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கின்றன. ஆனால் அப்படி ஏதும்
புதிய அம்சங்களை வழங்காமல் பயனர்களின் போன்களில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக கூறப்படுகிறது.

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்

அதேபோல் சில போலியான செயலிகள் வாட்ஸ்அப் போன்ற அம்சங்களை வழங்க முடியும் என்றாலும், மெசேஜிங் பயன்பாட்டில் அசல் பதிப்பில் நீங்கள் பெறும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்தை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாட்ஸ்அப் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க உதவுகிறது.

Advertisement
Advertisement
வாட்ஸ்அப்பின் போலி பதிப்பு

மேலும் வாட்ஸ்அப்பின் போலி பதிப்பு பிளே ஸ்டோரில் கிடைப்பதில்லை. இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் இருந்து பதிவிறக்க முயற்சிக்கும் பயனர்கள் தங்கள் போன்களில் அவற்றை நிறுவும் முன் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை

இப்போது தீங்கு விளைவிக்கும் HeyMods-க்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொணடு வருகிறோம். எனவே இதுபோன்றபோலியான செயலிகளை பயன்படுத்தாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட்.

புதிய அறிமுகம்

நாம் பயன்படுத்தும் இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் புதிய
ஈமோஜிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸ்அப் செயலியில் பெறும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட 6 ஈமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்குப்பட்டு வந்த நிலையில் விரைவில்அனைத்து ஈமோஜிகளும் அனுமதிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக WABeta தகவலின்படி, Android 2.22.15.7-க்கான பீட்டா பதிப்பு மற்றும் iOS 22.14.0.71-க்கான பீட்டா பதிப்பில் அனைத்து ஈமோஜிக்கான அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Umn news Tamil 
Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*