அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுகவில் அதிக முறை (3) விசாரிக்கப்பட்டது அவரிடம் தான். கொடநாடு வழக்கில் இருந்துத் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும்,
அதிமுகவின் விவிஐபிகளுக்கு அதில் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தவும் தான் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் திமுகவில் இணைந்ததற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஆறுக்குட்டிக்கு நெருங்கிய அதிமுக பிரமுகர்கள் சிலர் கூறுகையில், ``சட்டசபை தேர்தலில் தனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். சீட் கிடைக்காததால் அப்போதே அதிருப்தியானார். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள வேலுமணியோ, மற்ற நிர்வாகிகளோ அவரை கண்டு கொள்ளாமல் ஓரம் கட்ட தொடங்கினார்கள்.
ஒருகட்டத்தில் அவரின் சொந்த பகுதி தொண்டர்கள் கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கினார்கள். இதனால் ஆறுக்குட்டி நொந்துபோனார். அதனால் தான் லைம்லைட்டில் இருப்பது போல, அவ்வபோது ப்ரஸ்மீட் நடத்தி வந்தார்.
தான் இருக்கும் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இழுப்பது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஸ்டைல். அந்த வகையில் அவர் கோவை வந்தது முதலே, அதிமுகவில் ஏராளமான நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து வந்தார். அந்த வகையில் ஆறுக்குட்டிக்கும் அழைப்பு விடுத்தார். பாஜக-விலும் தூண்டில் போட்டுள்ளனர்.
அதேநேரத்தில் அதிமுகவில் பிரச்னைகள் தீர்ந்து சசிகலா கை ஓங்கினால், தனக்கு ரீ-என்ட்ரி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆறுக்குட்டி. ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் அவரிடம் பேசியுள்ளனர். ஆனால் சமீபகால நிகழ்வுகளால் அதிமுகவை நம்பி இனி பயனில்லை என புரிந்து கொண்டார்.
அதிமுகவில் இருந்தபோது மகளுக்கு மாவட்ட கவுன்சிலர் பதவி, மகனுக்கு கட்சி பதவி என்று குடும்பத்தையே அதிகார மையமாக மாற்றினார். இதனிடையே, ஆறுக்குட்டியை நேரில் பார்த்த செந்தில் பாலாஜி வாரிசுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அதனால்தான் திமுகவில் இணையும் முடிவை எடுத்திருக்கிறார்.
மேலும், லூஸ் டாக் விட்டு சர்ச்சையாகி அதனால் வாரிசுகளுக்கு பாதிப்பு ஆகிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். அதன் காரணமாக தான், பொள்ளாச்சியில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தான் பேசுவதைத் தவிர்த்து மகள் அபிநயாவை பேச வைத்தார்.
இருப்பினும் ஆறுக்குட்டியை நன்கு அறிந்த அதிமுக தொண்டர்கள் செல்போனில் அழைத்து, வாயை கிளறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு ஆடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சர்ச்சைகளை செந்தில் பாலாஜி விரும்ப மாட்டார் என்பதால், செல்போன், மீடியா என்று அனைவரிடம் இருந்து ஒதுங்கி அமைதியாக இருக்க முடிவு செய்திருக்கிறார்.” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/8F9efJc
via
