புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்களின் வாகன எரிபொருள் ஆண்டு செலவு... ஆர்.டி.ஐ தகவல் கூறுவதென்ன?

0

புதுச்சேரியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு, புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஆண்டில் கூடிய நாள்கள் எவ்வளவு, அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தது. அதில் கிடைத்த தகவல்களை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புகாராக அனுப்பியிருக்கிறது அந்த அமைப்பு. அதுகுறித்து நம்மிடம் பேசிய அதன் தலைவர் ரகுபதி, “புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொறுப்பேற்ற அரசின் அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காக பழைய கார்களை தவிர்த்துவிட்டு 3.3 கோடி ரூபாய்க்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.

ஆர்.டி.ஐ

முதல்வர் உட்பட 6 அமைச்சர்கள், பேரவை தலைவர், பேரவை துணைத் தலைவர், அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்ற செயலர் ஆகியோரின் வாகனங்களுக்கு எரிபொருள் செலவு ரூ.70.12 லட்சம் எனவும், புதுச்சேரி சட்டப்பேரவை பத்து நாட்கள் கடந்த நிதியாண்டில் கூடியுள்ளதாக ஆர்.டி.ஐயில் தகவல் தந்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையுடன் கூடிய மிகச் சிறிய யூனியன் பிரதேசமாகும். இந்நிலையில் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் 10 பேரின் வாகனங்களுக்கு ஓராண்டு எரிபொருள் செலவு ரூ.70.12 லட்சம் எனில், ஒருவருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.58,439/- ஆகிறது. அதன்மூலம் இவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 200 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களையும் உள்ளடக்கிய பரப்பளவே 480 சதுர கிலோமீட்டர்தான். அதில் அமைச்சர்கள் ஒரு நாளுக்கு 200 கிலோ மீட்டர் செல்வது என்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது. நிதி நெருக்கடியில் இருக்கும் புதுச்சேரி அரசு, 3 மாதங்களுக்கு ஒருமுறை பிணைப்பத்திரங்களை வைத்து 100 கோடி, 125 கோடி என கடன்பெரும் அளவிற்குத்தான் இருக்கிறது. மேலும் மதுபான விற்பனை வரியின் மூலம்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என நீதிமன்றத்தின் பிரமாண பத்திரத்தில் உறுதிகூறும் நிலையில் உள்ளது அரசு.

கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமலும், பல அரசு பொது நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் அளிக்க முடியாமலும் இருக்கிறது. அதனால் புதுச்சேரி மாநில மக்களின் நலன் கருதியும், அரசின் நிதி நிலையையும் கருத்தில் கொண்டும் அமைச்சர்களின் எரிபொருள் செலவினம் மற்றும் பிற அனாவசிய செலவினங்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/kFYDQbe
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*