ரஜினி ஆசைப்படி மீண்டுமொரு முறை நடந்த வளைகாப்பு! இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார் சௌந்தர்யா

0

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபரும் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்தவருமான விசாகனுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

சென்னை கடற்கரை சாலையிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்தத் திருமணத்தில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சௌந்தர்யா – விசாகன் திருமணமாகி இரண்டாண்டுகள் கடந்த நிலையில் சௌந்தர்யா தாய்மை அடைந்தார். பிரசவத்துக்கு நெருங்கிய வேளையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாகனின் இல்லத்தில் வைத்து சௌந்தர்யாவுக்கு வளைகாப்பு நடந்தது. ரஜினி மற்றும் விசாகன் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ரஜினி வீட்டிலும் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. மகளுக்குத் தன் வீட்டில் வளைகாப்பு நடத்திப் பார்க்க வேண்டுமென ரஜினி விரும்பியதாகச் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சுஹாசினி, மீனா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

ரஜினி- விசாகன் - சௌந்தர்யா

இந்நிலையில் பிரசவ தேதி நெருங்கியதால் நேற்று சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌந்தர்யாவுக்கு நேற்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சௌந்தர்யாவும் இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதிவிட்டிருந்தார்.

சினிமா பிரபலங்கள் பலரும் சௌந்தர்யா – விசாகன் தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்ற்னர்.



from தமிழ் சினிமா https://ift.tt/2z9NOoU
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*