``சுய விளம்பரத்துக்குச் செய்தாலும் நடவடிக்கை எடுங்கள், ஆனால்..!" - வானதி சீனிவாசன்

0

கோவை உட்பட தமிழ்நாட்டில் ஆங்காங்கே அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், கோவை மாநகரில் அந்தச் சம்பவங்கள் நடந்தப் பகுதிகளை பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் ஆய்வு செய்தார்.

வானதி சீனிவாசன் ஆய்வு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கோவை மாநகர பகுதிகளில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடு, கடைகள்மீது தாக்குதல் நடந்திருக்கின்றன. இதுவரை காவல்துறையினர் 2 பேரை மட்டுமே கைதுசெய்திருக்கின்றனர்.

கோவை மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பயங்காரவாத தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இங்கு சிறு சிறு பிரச்னையும் விளைவுகளை ஏற்படுத்தும். அமைதியை குலைத்துவிட்டு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. கோவை பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு கெடுவதை முதலமைச்சர் அனுமதிக்கக்கூடாது.

வானதி சீனிவாசன்

நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்துக்கு எதிராக இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். விளம்பரம், சுயநலத்துக்காக செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். அதேநேரத்தில் இதுமாதிரி நடக்கிறது என்பதால், பயங்காரவாத செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவிடக்கூடாது.

அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்காமல் இருக்கக்கூடாது. நூற்றுக்கணக்கான இந்து அமைப்பினர் படுகொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். சமரசம் செய்து கொள்ளாமல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை ஆதாரம் இருந்தும் கைதுசெய்ய ஏன் தாமதம்?

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு

இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் 2 பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கு வேறு அரசியல் அழுத்தம் இருக்கிறதா? நாட்டுக்கு எதிராக‌ இருப்பவர்கள், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/FC7HpK1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*