`டயட்டால் ஏற்பட்ட சர்க்கரை நோய்; 3 மாதம் கோமா! - 43 வயதில் நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம்!

0

90களில் பிரபலமான நடிகர் பரத் கல்யாண். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாரதி கண்ணம்மா' தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருடைய மனைவி பிரியா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திருக்கிறார்.

பரத் கல்யாண் குடும்பத்துடன் ரிஷி

பரத் கல்யாண் மனைவி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அதுகுறித்து அவருடைய நண்பரும், நடிகருமான ரிஷியிடம் பேசினோம்.

`பிரியா கடந்து மூன்று மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பேலியோ டயட் ஃபாலோ பண்ணதால டயாபடிக் வந்துடுச்சு. அதுக்காக ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வந்தாங்க. உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாங்க.  கோமாவிலேயே கொஞ்ச நாள் இருந்தாங்க. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இறந்திருக்காங்க. 43 வயது தான் ஆகுது! பிரியாவுடைய தங்கச்சி இறுதிச் சடங்கு செய்வதற்காக வெளியூரிலிருந்து வந்துட்டு இருக்கிறதனால நாளை காலை அவங்களுடைய இறுதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருக்காங்க!' என்றார்.

குடும்பத்தினருடன் பரத் கல்யாண்

பரத் கல்யாண் - பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். பிரியாவின் திடீர் மரணம் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது! 



from தமிழ் சினிமா https://ift.tt/LAOsRhw
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*