குழந்தை நட்சத்திரமாக 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீனா. 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பிரபலமானவர். அவரது ரசிகர்களால் கண்ணழகி எனக் கொண்டாடப்பட்டவர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவைத் தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வந்தார். இதனிடையே சமீபத்தில் தன் கணவனை இழந்த மீனா அதிலிருந்து தற்போது மீண்டுவருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்துள்ளது. இதனால் ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது, இப்படி நான் பொறாமைக் கொள்வது இதுவே முதல் முறை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
மீனாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
from தமிழ் சினிமா https://ift.tt/CcKbzN2
via Umn news Tamil
