மியான்மரில் தவிக்கும் தமிழர்கள்: `முயற்சிகள் வெற்றி பெறும்’ தூதரகத்தின் பதில் குறித்து சு.வெங்கடேசன்

0

மியான்மருக்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அங்கு ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது.

சு.வெங்கடேசன் எம்.பி.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "மியான்மரில் சிக்கித் தவிக்கும் 4 தமிழர்களை மீட்க வேண்டுமென்று  21.09.2022 அன்று மியான்மரில் உள்ள இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

அதற்கு இந்தியத் தூதர் வினய்குமார் அளித்துள்ள பதிலில், 'தாய்லாந்தில் வேலை வாங்கித்தருவதாக இந்திய மற்றும் வேறு சில அந்நிய நாடுகளின் இளைஞர்கள் ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்திருக்கிற ஒரு சர்வதேச மோசடி இதில் சம்பந்தப்பட்டுள்ளது.

இந்தியத் தூதரின் கடிதம்

மியாவாடி என்கிற இடத்தில் அவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இடம் மியான்மர் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. ஆயுதம் தாங்கிய இனக் குழுக்களின் செல்வாக்கின் கீழ் அது உள்ளது.

இங்கேதான் இந்திய மற்றும் அந்நிய குடிமக்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அங்கு பயணம் சாத்தியமில்லை. தாய்லாந்து முனையில் இருந்து அவர்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கிடைத்துள்ள தகவல்களின்படி 90 இந்தியர்கள் இந்த மோசடி வலைக்குள் வீழ்ந்துள்ளனர். அதில் 60 பேர் மியாவாடி பகுதிக்குள் மோசடி கும்பலால் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சு.வெங்கடேசன்

நாங்கள் தொடர்ந்து மியான்மர் அரசுடனான ஒருங்கிணைப்புடன் நிலைமைகளை கவனித்து வருகிறோம். பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, வணிக சமூகத் தொடர்புகளையும் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம். காரணம் அந்த பகுதி உள்ளூர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் முழுவதும் இல்லாத நிலை இருப்பதே.

இதுவரை மியாவாடி பகுதியில் இருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் பதில் தந்துள்ள மியான்மரின் இந்தியத் தூதருக்கு நன்றி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற்று எல்லா இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/zoSNivp
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*