மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: சந்தேக நபரிடம் போனில் பேசிய இளைஞர் - குமரியில் ஒருவரிடம் விசாரணை

0

கர்நாடகா மாநிலம் மங்களூரில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பயணியாக வந்த ஷாரிக்(22) என்பவரும் படுகாயம் அடைந்தனர். மங்களூர் சம்பவத்துக்கும் கோவை குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்படுகிறது. இதுகுறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மங்களூர் குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒருவரின் செல்போன் எண்ணுக்கு நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் பணிபுரியும் அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான் என்பவரின் செல்போனில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. இதுகுறித்து குமரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அஜிஜுர் ரகுமானை கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனின் வைத்து குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.

கோட்டாறு காவல் நிலையத்தில் விசாரணை

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "கர்நாடகா மாநிலம் மங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் வசித்துவரும் அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான்(23) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நாகர்கோவில் ரயில்வே ஃபீடர் ரோட்டில் ஒரு பாஸ்ட் ஃபுட் கடையில் கடந்த 2020-ம் ஆண்டுமுதல் அஜிஜுர் ரகுமான் வேலை செய்து வருகிறார். அந்த பாஸ்ட் ஃபுட் கடை நடத்திவருபவரின் மனைவி ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த 26.09.22 அன்று ஒரு சந்தேக எண்ணிலிருந்து பேசிய நபர் தமிழ் அல்லாத புரியாத மொழியில் பேசியுள்ளார்.

அது ஹிந்தி மொழியாக இருக்கலாம் என நினைத்த அந்த பெண் அஜிஜுர் ரகுமானிடம் அந்த நம்பரைக் கொடுத்து எதிர் முனையில் பேசியது யார் என கேட்கும்படி கூறியுள்ளார். அஜிஜுர் ரகுமான் அந்த நம்பருக்கு தனது செல்போனில் இருந்து அழைத்து பேசியுள்ளார். ஆனால் எதிர்முனையில் பேசியவர் என்ன மொழியில் பேசுகிறார் என புரிந்து கொள்ள முடியவில்லை என அஜிஜுர் ரகுமான் அப்போது கூறியுள்ளார்.

அசாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான்

இந்த நிலையில் மங்களூர் குண்டு வெடிப்பில் சந்தேகத்துக்கு இடமாக போலீஸ் விசாரணையில் உள்ள நபரின் செல்போனை அங்குள்ள போலீஸார் சோதனை செய்துள்ளனர். அந்த எண்ணுக்கு கடந்த 17.11.2022 அன்று மாலை அஜிஜுர் ரகுமான் போனிலிருந்து 10 வினாடிகள் அழைப்புச் சென்றுள்ளது. அதுகுறித்து அஜிஜுர் ரகுமானிடம் விசாரணை நடத்திவருகிறோம். தவறுதலாக அழைப்பு சென்றுள்ளதாக அஜிஜுர் ரகுமான் கூறுகிறார். ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/lOo3V7q
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*