ஒரே பனிமூட்டமா இருக்குதே.. இது எப்ப சார் போகும்?.. மழை எப்போ வரும்? நெட்டிசனுக்கு வெதர்மேன் பதில்! | Fog in Tamilnadu will be disappeared from tomorrow, says Tamilnadu Weatherman
சென்னை: தமிழகத்தில் பனிப்பொழிவு எப்போது நீங்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் தந்திருக்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த 11-ஆம் தேதி ஒரு காற்றழுத்தம் உருவானது. அது புயலாக வலுப்பெறாமல் வலுவிழந்தது. எனினும் இந்த காற்றழுத்தம் மிக கனமழையை கொடுத்தது.
இந்த மழையால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி ஒரு காற்றழுத்தம் உருவானது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் வலுவடையவில்லை.
இந்த காற்றழுத்தத்திற்கு இடையே 4 நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என சொல்லப்பட்டது. அதாவது வடகிழக்கு தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு பனிமூட்டமாகத்தான் இருக்கும் என கடந்த 16 ஆம் தேதியே தமிழ்நாடு வெதர்மேன் கணித்திருந்தார்.
அதன்படி கடந்த சில தினங்களாக மாலை 5 மணிக்கு மேல் கடுங்குளிர் நிலவி வந்தது. அது போல் காலை வேளைகளிலும் பனிப்பொழிவால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் எல்லா வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. அது போல் வாகனங்களின் மீது பனித்துளிகள் இருந்தன. அதுவும் குடியிருப்புகள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலும் குளிர் தெரிந்தது.
மாலை 5 மணி வாக்கில் இரு சக்கர வாகனத்தில் 30 கி.மீ. வேகத்தில் சென்றாலும் கூட குளிர் காற்று காதில் பாய்ந்து சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த கடுங்குளிரால் காலையிலும் மாலையிலும் வாக்கிங் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை வேளைகளில் ஃபேனை ஃபுல் ஸ்பீடு கூட ஓட வைக்காமல் மக்கள் குளிரால் அவதியடைந்தனர்.
குளிர் இருக்கும் போது மழை வராது என்பார்கள். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை இல்லை எனில் குளிர்காலம் எப்போது முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வெதர்மேன் நாளை பனிப்பொழிவு முடியும் என தெரிவித்துள்ளார். நாளையுடன் பனிப்பொழிவு முடியும் என்றால் நாளை மறுநாள் முதல் மழைத் தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இந்த சீசனின் முதல் டிப்ரெஷன்.. நாளை சென்னையில் காற்று வீசும்.. அடுத்து என்ன? வெதர்மேன் அப்டேட் | Tamilnadu Weatherman confirms that low has inttensified into depression
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனுக்கான முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்தம் காற்றோடு காற்றாக போய்விட்டது. சரி அடுத்து உருவாகியுள்ள காற்றழுத்தமாவது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவோ வரும் வராது என்ற காமெடி போல் ஆட்டம் காட்டி வருகிறது.
அதாவது காற்றழுத்தத்துடன் வறண்ட காற்று சந்தித்துக் கொண்டதால் புயலாக மாறுவது கடினம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாக உருவானது. இதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதனால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையிில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.
இதுதான் இந்த சீசனின் முதல் காற்றழுத்தம். நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு பகுதியிலிருந்து வரும் மேகங்கள் சென்னை உள்பட வட தமிழகத்தின் மேல் நிலவும். இதனால் மழை பெய்ய வாய்ப்பு ள்ளது. நாளை சென்னையில் நல்ல காற்று வீசும். அது போல் கடலோரத்திற்கு அருகே உள்ள பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளிலும் காற்று வீசும். வறண்ட காற்று பிரச்சினை இல்லை. 20 முதல் 30 முடிச்சுகள் உள்ளதுதான் பிரச்சினை என தெரிவித்துள்ளார்.
நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யும் என்பதால் பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை காற்றழுத்தம் ஏற்பட்ட போது 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. அது போல் இந்த முறையும் பள்ளி விடுமுறைக்காக குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 21, 22 தேதிகளில் நல்ல மழை பெய்யும் என்பதால் விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
நேற்று வெதர்மேன் போட்ட பதிவில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அதி கனமழை பெய்யும். நாளை நாள் முழுவதும் காற்றானது மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் வீசும். தெற்கு ஆந்திராவிலிருந்து வடதமிழக கடலோர பகுதிகள் வரையிலான கடற்பகுதியில் இன்று, நாளை, நாளை மறுநாள் மீனவர்கள் செல்வது கடினமாக இருக்கும். எனவே இந்திய வானிலை மையம் மற்றும் சென்னை வானிலை மையத்தின் அறிவுரையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
