"அதிமுக-வுக்காக பன்னீர்செல்வம் போராடி வருகிறார்!" - டி.டி.வி.தினகரன்

0

அ.தி.மு.க அரசின் முன்னாள் தலைமை கொறடா துரை. கோவிந்தராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியை செய்து வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்த தேர்தலில் ஒரு முத்திரையை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்களும் ஈடுபட்டுள்ளோம்.

தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தினகரன்

தலையில்லா முண்டமாக அ.தி.மு.க உள்ளது. பன்னீர்செல்வமும் பழனிசாமியும் பிரிந்து செயல்படுகின்றனர். தேர்தல் ஆணையத்தின்படி இருவரும் வேட்பாளருக்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும். எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவில் நான்கு மாதங்களில் கட்சியில் தேர்தல் நடத்தப்படும், பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை, தற்போது எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பதுகூட சட்டப்படி தவறாகும்.

துரை.கோவிந்தராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி

அ.தி.மு.க-வின் சின்னத்திற்காகவும், கட்சிக்காகவும் அங்கிருக்கும் தொண்டர்கள், பழனிசாமி அதிமுக-வை அழிக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார் என்பதை உணர்ந்து வருகின்றனர். இன்றைய சூழலில் இரட்டை இலை செயல்படாமல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கூடவே இருந்து காப்பாற்றிய பன்னீர்செல்வத்தையே அவர் வெளியேற்றியுள்ளார். தற்போது வேறு வழியின்றி கட்சிக்காக பன்னீர்செல்வம் போராடி வருகிறார்.

அ.தி.மு.க-வின் எதிர்காலம் நீதிமன்றத்தில் இருப்பது போல மாற்றியது எடப்பாடி பழனிசாமிதான். அவர் அ.தி.மு.க-வை பலவீனப்படுத்துவது திமுக-வுக்குத்தான் லாபமாக அமையும். தன் மீது தி.மு.க எந்த வழக்கும் போட்டுவிடக்கூடாது என்பதற்காக பழனிசாமி இறங்கியுள்ளார். துரோகம், சுயநலம் என எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். எனவே எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி ஏற்பட்டால் அதிமுக-வுக்கும் தமிழகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதாக அமையும். பன்னீர்செல்வமும் நானும் வாய்ப்பு கிடைக்கும் போது சந்திப்போம்.

கருணாநிதி குடும்பம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆக்டோபஸ் போல அனைத்து துறைகளிலும் தங்கள் குடும்பம்தான் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தற்போது அது போன்றுதான் நடந்து வருகிறது. தங்கள் குடும்பம் கூறுவதைப் போலத்தான் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களிடம் சர்வாதிகாரம் செய்து வருவதாகவும், உண்மையிலேயே ரெட் ஜெயன்ட் நிறுவனம் அரக்கன் போல் செயல்படுவதாகவும் கூறி வருகின்றனர். இதற்கான நல்லதொரு முடிவை காலம் தரும்.

பழனிசாமி ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியபோது நான் ஆதரவு தெரிவித்ததற்கு காரணம், சுயநலமோ, எங்களுக்கு துரோகம் செய்துவிட்டாரோ என்பதோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சி இருந்தால் அதிமுக-வை அழித்துவிடுவார் என்பதற்குதான். நான் அதிமுக-வை மீட்டெடுப்பேன் எனக் கூறிய நிலையில், அது தானாகவே நடந்துவிடும். எடப்பாடி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்திருந்தவர்கள், கீழே போட்டு மிதிப்பதற்கான காலமும் விரைவில் வரும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Z53srXG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*