`தொலைந்துபோன என்னைக் காப்பாற்றிய தேவதை!' கோலிவுட்டின் லேட்டஸ்ட் காதல் ஜோடிகள்!

0

கோலிவுட் நட்சத்திரங்களுக்கு இது காதல் டு கல்யாண சீசன் போலிருக்கிறது. ஆதி- நிக்கி கல்ராணி ஜோடியைத் தொடர்ந்து இன்னும் பல ஜோடிகளுக்கு காதல் கைகூடி கெட்டிமேள சத்தம் கேட்கவிருக்கிறது. சித்தார்த் - அதிதி ராவ், கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன், ஹன்சிகா - சோஹேல் கதுரா என பலரின் டும்டும்டும் விரைவில் நிகழவிருக்கிறது.

ஹன்சிகா

தமிழில் ஹன்சிகா நடித்து முடித்த படங்களின் லிஸ்டே அரை டஜனுக்கு மேலிருக்கும். ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள அவரது அம்மா வலியுறுத்தி வந்தார். ஆனாலும் ஹன்சிகா அவர் அம்மாவிடம் பதிலேதும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார். இந்த சூழலில் தான் ஹன்சிகாவின் திருமண அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. பாரிஸ் ஈஃபில் டவரின் முன்பாக சோஹேல், கேன்டில் லைட்கள் சூழ 'என்னைத் திருமணம் செய்துகொள்' என ரொமாண்டிக்காக புரபோஸ் செய்த போட்டோவை ஹன்சிகா பதிவிட்டிருந்தார். மும்பையை பூர்வீகமாகக் கொண்ட ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுராவை அவர் கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணம் அடுத்த மாதம் 4-ம் தேதி ஜெய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் நிகழ்கிறது.

கௌதம் - மஞ்சிமா

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் பல மாதங்களாகவே காதலித்து வந்தார்கள். 'தேவராட்டம்' படத்தில் தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. காதல் தீவிரமானதில் இருவரின் வீட்டிற்கு விபரம் தெரிந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த சூழலில் தான் இருவரும் காதலை அறிவித்திருக்கிறார்கள். தங்கள் இன்ஸ்டாவில் 'மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன என்னை காப்பாற்றும் தேவதையாக என் வாழ்வில் வந்தாய், வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்! ' என உருகியுள்ளனர். கௌதம் - மஞ்சிமா இருவரின் வீட்டிலும் க்ரீன் சிக்னல் கிடைத்திருப்பதால், விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.

சித்தார்த் - அதிதி

கோடம்பாக்கத்தில் யாரும் எதிர்பார்த்திராத காதல் ஜோடியாக சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி ஜோடிதான். இருவருமே மணிரத்னத்தின் ஃபேவரைட் நடிகர்கள் என்பதில் ஆரம்பித்திருக்கிறது நட்பு. அதன் பின்னர் இருவரும் தெலுங்கில் 'மகா சமுத்திரம்' என்ற படத்தில் இணைந்து நடித்தில் நட்பு காதலாக மலர்ந்தது என்கிறது டோலிவுட். அதிதியின் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் சித்தார்த். மும்பையில் இருந்து வெளிநாடு பறந்தவர்கள், அப்படியே தங்கள் காதலையும் இன்ஸ்டாவில் தெரியப்படுத்தியுள்ளனர்.

நடிகர் விஷால்

நடிகர் விஷால் - 'நாடோடிகள்' அபிநயாவை காதலிப்பதாக ஒரு தகவல் பரவியது. விசாரித்ததில் அது பட புரொமோஷனுக்காக கிளம்பிய வதந்தி என்கிறார்கள். விஷால் இப்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவரது மனைவியாக அபிநயா நடித்துள்ளார். அந்தப் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியானதில் இப்படி ஒரு தகவல் பரவியுள்ளது. ஆனால் விஷால் ஒருவரை காதலிப்பதாக நமது விகடன் பேட்டியில் அவரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



from தமிழ் சினிமா https://ift.tt/wy6fL3X
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*