கரூர் மாவட்டம், குளித்தலையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது சிவா டெக்ஸ்டைல்ஸ். குளித்தலை மட்டுமின்றி, கரூர் ஜவஹர் பஜார், சேலம், திருப்பூர், ஊட்டி ஆகிய நான்கு இடங்களில் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் இருக்கின்றன. இந்த ஜவுளி நிறுவனத்தை சரவணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சிவா ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியிருக்கின்றனர். கரூர் மாவட்டத்துக்குட்பட்ட கரூர் மாநகரம், குளித்தலை, சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட ஜவுளி நிறுவனத்துக்குச் சொந்தமான கிளைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
ஊட்டி நகரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சிவா டெக்ஸ்டைல்ஸ் கிளையில், 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கரூர் நகரில் அமைந்திருக்கும் ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

கரூர் நகரில் அமைந்திருக்கும் கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்திருக்கும் ஜவுளி கடை என நான்கு இடங்களிலும் சேலம், திருப்பூர், ஊட்டி ஆகிய கிளைகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும், மாலை வரை சோதனை தொடரும் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/6cVfnQU
via
