நெல்லை: 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மனவேதனை... தம்பதி எடுத்த விபரீத முடிவு!

0

நெல்லை, புறநகர் பகுதியான சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கிறார். அவரின் மனைவி ராதிகா. இந்த தம்பதிக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை குழந்தை இல்லாததால் இருவரும் மிகுந்த சோகம் அடைந்திருக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன், நிறையக் கோயில்களுக்கும் சென்று வந்திருக்கின்றனர்.

ஆறுமுகம்-ராதிகா வசித்த வீடு

தங்களுக்குக் குழந்தை இல்லாத சோகத்தை இருவருமே அருகில் வசிப்பவர்களிடம் சொல்லிப் புலம்பி வந்திருக்கிறார்கள். உறவினர்களும் பக்கத்து வீடுகளில் வசிப்போரும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை வீடு பூட்டிக் கிடந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டைத் தட்டியுள்ளனர். ஆனால் ஒரு சத்தமும் கேட்காததால் போலீஸுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

சுத்தமல்லி போலீஸார் வந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது ராதிகா விஷம் அருந்திய நிலையில் உயிரிழந்து கிடந்திருக்கிறார். அருகிலேயே அவரின் கணவன் ஆறுமுகம் தூக்கிட்ட நிலையில் கிடந்திருக்கிறார். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸார். உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தற்கொலை செய்து கொண்ட தம்பதி

குழந்தை இல்லாத சோகம் வாட்டியதால் கணவனும் மனைவியும் தற்கொலை செய்தார்களா அல்லது அருகில் உறவினர்கள் யாரும் அவமரியாதையாகப் பேசியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழவூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/SymuvMj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*